நியூடெல்லி, July 27, 2016 /PRNewswire/ --
ராக்கி 2016 க்கு மிகக்கூடுதலான ராக்கி பரிசுப்பொருட்களுடன் கூடிய புத்தம் புதிய கேட்லாக்கை (பட்டியலை) Rakhi.Giftalove.com அறிவித்திருக்கிறது. இந்த நேரத்தில் வசதியான, மறக்க முடியாத ஷாப்பிங் அனுபவத்தை அவர்களுடைய வலைத்தள ஸ்டோருக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் முன்னணி ஆன்லைன் ஸ்டோர் பகிர்ந்து கொள்கிறது.
(Logo: http://photos.prnewswire.com/prnh/20160726/10151285 )
2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரவிருக்கும் ரக்ஷா பந்தன் (ராக்கி) வைபவத்திற்காக Rakhi.Giftalove.com பிரத்யேகமான பொருட்களையும், பரிசுகளையும் வெளியிடவிருக்கிறது. உடன் பிறந்தவர்களுக்கிடையேயான அன்பைக் கொண்டாடும் வைபவத்திற்காக இந்தியாவிலிருக்கும் பிரபலமான பரிசுப்பொருட்களின் ஸ்டோர் ஒவ்வொரு வருடத்தைப் போலவே கண்களைக் கவரும் வகையில் தனித்தன்மை வாய்ந்த விதவிதமான பொருட்களைக் கொண்டிருக்கிறது.
இந்தியாவில் வளர்ந்து வரும் ஆன்லைன் ஷாப்பிங் ட்ரெண்டில் பங்கு பெறும் வகையில் சில ஆண்டுகளுக்கு முன்பு Primo Gifts Pvt. Ltd என்கிற நிறுவனம் Rakhi.Giftalove.com ஐ அறிமுகப்படுத்தியது. புதுடெல்லியை மையமாகக் கொண்டு இயங்கி வரும் இந்நிறுவனம் அனைத்து விதமான விழாக்கள் மற்றும் பண்டிகைகளுக்கானப் பரிசுப் பொருட்களை விற்று வருகிறது. இணையத்தில் முதலாண்டிலேயே ஓரளவுக்கு கிடைத்த நல்ல வரவேற்பு வருகை தருவோர் மற்றும் வாங்குபவர்களின் அனுபவத்தை மேம்படுத்துவதற்கு இக்குழுவினருக்கு உத்வேகமாக அமைந்திருந்தது. பரிசுப் பொருட்கள் சம்பந்தப்பட்ட நிபுணர்களை ஆலோசித்தது, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் ராக்கி வடிவமைப்புகளையும், பரிசுப் பொருட்களையும் கண்டறிந்தது, விநியோகக் கூட்டமைவை (நெட்வொர்க்) வலுப்படுத்தியது என பல விஷயங்களை கடந்த சில வருடங்களில் இந்த ஸ்டோர் அறிமுகப்படுத்தியது. இன்றைக்கு ஆன்லைன் ரக்ஷாபந்தன் ஷாப்பிங்கில் அதிக வருகையைப் பெற்ற தளங்களில் ஒன்றாக இது இருக்கிறது.
ராக்கி பரிசுப் பொருட்களை இந்தியாவிலும், வெளிநாட்டிலும் ஆன்லைனில் விநியோகிப்பதற்கான வசதியை Rakhi.Giftalove.Com கொண்டிருக்கிறது. இதனுடைய திருத்தியமைக்கப்பட்ட விநியோக இடங்களின் பட்டியலில் உலகளவில் பல இடங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. எப்போதும் இருப்பதைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையிலான பரிசுப் பொருட்கள் பதிவு செய்யப்படும் என்பதில் இந்த ஸ்டோருக்குப் பின்புலமாக இருக்கும் குழு கருதுவதோடு அது எப்படி என்பதையும் வெளிப்படுத்தியிருக்கிறது.
Deelip Singh, Giftalove.com -ன் நிறுவனர் மற்றும் இயக்குநர், `இது பரிணாம வளர்ச்சியின் மிகப்பெரிய பயணம். உலகத்தில் பல பாகங்களில் வசித்துவரும் வாடிக்கையாளர்களை சென்றடைந்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இணையத்தளத்தில் ராக்கி சம்பந்தமாக அதிகமான பொருட்களைக் கொண்டிருப்பது எங்கள் ஸ்டோர்தான் என்கிற பெருமிதத்தை 2016 ஆம் ஆண்டின் கேட்லாக் (பட்டியல்) முற்றிலுமாக வெளிப்படுத்தும். இந்த ஸ்டோருக்கு வருகைதருவோர் பாரம்பரியமான ராக்கி, டிசைனர் ராக்கி, லும்பா ராக்கி, சில்வர் ராக்கி மற்றும் பலவற்றை ஒரே இடத்தில் பார்த்து பரவசமடைவார்கள். ராக்கி பரிசுப் பொருட்களைப் பொருத்தவரையில், பரிசுப் பொருட்கள் சம்பந்தப்பட்ட தொழில் வல்லுநர்களின் உதவியுடன் நாங்கள் படைப்பாற்றலையும், தரத்தையும், சிந்தனையையும் எங்களது கலெக்ஷனில் சேர்த்திருக்கிறோம். அனைத்து வயதினர் மற்றும் அனைவரின் பட்ஜெட்டுக்கும் ஏற்றவகையில் அதிகபட்ச தனிப்பட்ட வாங்கும் அனுபவத்தை அனைவருக்கும் வழங்குகிறோம் என்பதை முக்கிய குறிப்பிடவேண்டும்'எனக் கூறினார்.
உலகளவில் இலவசமாக விநியோகம் செய்வது வாடிக்கையாளர்களிடம் வரவேற்பு பெறும் என்று இந்த ஸ்டோர் கருத்தில் கொண்டிருக்கிறது. இது குறித்து ஸ்டோரின் தலைமைத் தொழில்நுட்ப அதிகாரி, CTO Mritunjay Kumar, 'இந்தியாவிலும் மற்ற நாடுகளிலும் உள்ள வாடிக்கையாளர்கள் தொந்தரவற்ற ஷாப்பிங் செய்யவதை உறுதி செய்ய எங்கள் குழுவினர் நாள் முழுவதும் சேவையில் இருப்பார்கள். உள்நாட்டில் மிகவும் தொலைதூர இடங்களை சென்றடைவதோடு, சர்வதேச அளவில் முக்கியமான இடங்களைச் சென்றடையவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். உதாரணமாக, 2016 ஆம் ஆண்டு விநியோகப் பட்டியல் அமெரிக்காவில் அதிகப்படியான நகரங்களையும், பிராந்தியங்களையும் கொண்டதாக இருக்கிறது. போட்டியைப் பொருத்தளவில் மற்ற ஆன்லைன் ராக்கி ஸ்டோர்களைக் காட்டிலும் எங்களின் இலவச விநியோக சேவை எங்களுக்குச் சாதகமாக இருக்கும்" எனக் கூறினார்.
வலைதள ஸ்டோர் rakhi.giftalove.com ல் இப்போது இருக்கிறது. அதில் வெவ்வெறு பொருள் குழுமங்களிலிருந்து ராக்கிப் பரிசுப் பொருட்களைத் தெரிவு செய்வதற்கான சிறந்த குறிப்புகளும், ஷிப்பிங் கொள்கை சம்பந்தப்பட்ட தகவலும் பகிரப்பட்டுள்ளது.
Rakhi.Giftalove. com பற்றி:
Rakhi.Giftalove.com என்பது தரமான ராக்கி பரிசுப்பொருட்களுக்கும், ஆன்லைன் ராக்கிகளுக்கும் இணையானது ஆகும். திறமை வாய்ந்த தலைமையுடனும் நிபுணர்களின் வழிகாட்டுதலுடனும் இதன் எல்லையை உலக அளவில் பரவலாக்கியதோடு புகழ்பெற்ற லாஜிஸ்டிக்ஸ் கூட்டாளிகளின் உதவியுடன் பல நாடுகளுக்கு விநியோகச் சேவையை வழங்கிவருகிறது.
ஊடகத் தொடர்புக்கு
Mritunjay Kumar
[email protected]
தொலைபேசி: 011-66765500
Primo Gifts Pvt Ltd
Share this article