மும்பை, August 2, 2016 /PRNewswire/ --
ஆகஸ்ட் 1 முதல் செப்டெம்பர் 12, 2016 வரை வருடாந்திர உறுப்பினருக்கானக் கட்டணத்தில் 35% வரையிலான தள்ளுபடிச் சலுகை.
இந்தியாவின் 80 நகரங்களில் 176க்கும் அதிகமான உடற்பயிற்சி மையங்களை நடத்திவரும் இந்தியாவிலேயே மிகப் பெரிய உடல் தகுதி நிறுவனமான Talwalkars Better Value Fitenss Limited (TBVFL) தனது மிகவும் பிரபலமான வருடாந்திர உறுப்பினருக்கான தள்ளுபடிச் சலுகையை அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறது. ஆகஸ்ட் 1 முதல் செப்டெம்பர் 12 வரை ஜிம்மின் வருடாந்திர உறுப்பினர் கட்டணத்தில் 35% வரை தள்ளுபடி சலுகை அளிப்பதோடு பிரத்யேக சலுகைகளாக உடல் மசாஜ், தனிப்பட்ட முறையிலான பயிற்சி போன்ற பல கூடுதலான சேவைகளையும் அளிக்கவிருக்கிறது. இதுதவிர, ஆகஸ்ட் 01-05, 2016 வரை உறுப்பினராகப் பதிவு செய்து கொள்பவர்களுக்கு `முன்சேர்பவர்' சலுகையாக பல நன்மைகளையும் Talwalkars வழங்கவிருக்கிறது.
(Photo: http://photos.prnewswire.com/prnh/20160801/10151621-a )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20160801/10151621 )
புதிய தலைமுறையைச் சேர்ந்த இந்திய நுகர்வோர்கள் உடல் தகுதி மற்றும் உடல் நல நன்மைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால் தொடர்ந்து சிறந்த வசதிகளையும், தனித்துவமும் புதுமையுமான பயிற்சிகளையும், சரியான வழிகாட்டுதலையும், இந்தத்துறையைச் சார்ந்த நிபுணர்களிடமிருந்து உத்வேகத்தையும் அவர்கள் ஜிம்மிலிருந்து எதிர்பார்க்கிறார்கள். Zorba (யோகா) Zumba, Reduce (டயட் அடிப்படையிலான எடை இழப்புத் திட்டம்) Nuform (மேம்படுத்தப்பட்ட எலக்ட்ரோ மேக்னடிக் ஸ்டிமுலேஷன் பயிற்சி) போன்ற வெவ்வேறு விதமான உடல் தகுதி மற்றும் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட திட்டங்களை, உடல் தகுதி ஆர்வலர்களின் அதிகரித்து வரும் தேவைகளை ஈடும் செய்யும் வகையில் Talwalkars தன்னை அனைத்து வழிகளிலும் தயார்படுத்திக் கொண்டிருக்கிறது.
இந்த முனைவு (தொடக்க முயற்சி) பற்றி Mr. Prashant Talwalkar நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி, Talwalkars Better Value Fitness Limited, பேசும் போது,`உடல் தகுதி உங்களுடைய ஒவ்வொரு நாள் வாழ்க்கையின் பகுதியாக இருக்கும் போது அதிலிருந்து அதிகப் பலனைப் பெறுவீர்கள். உங்களுடைய உடல் தகுதி பரிபாலனத்தை ஆரம்பிக்க இது நல்ல தருணமாகும். எங்களுடைய வருடாந்திர உறுப்பினர் தள்ளுபடி சலுகையை அறிவிப்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இதன்மூலம் Talwalkars நோக்கத்தின் படி, எங்களுடைய உறுப்பினர் அனைவரும் தங்களை நிலைப்படுத்திக் கொள்ளவும், மேம்படுத்தி புதுப்பித்துக் கொள்ளவும் தேவையான கருவிகளை வசதியான முறையில் அணுகி உடல்நலம் மற்றும் உடல் தகுதிக்கு அவர்களை அர்ப்பணித்துக் கொள்ளமுடியும்" எனக் கூறினார்.
இந்த நிகழ்ச்சியைப் பற்றி Mr. Aditya Dhillon, தலைவர் - செயல்பாடு, Talwalkar Better Value Fitness Limited, பேசும் போது, `ஆரோக்கியத்தைப் பொருத்தளவில் உங்கள் உடல்நிலை சம்பந்தமான அனைத்துக்கும் பதிலளிக்கும் வகையில் Talwalkars ல் நாங்கள் முழுமையான அணுமுறையை நம்புகிறோம். . எங்களின் பாரம்பரியத்திலும், தரத்திற்கான அர்ப்பணிப்பிலும் பெருமை கொள்வதோடு உறுப்பினருக்கு சேவை செய்வதும் எங்களுடைய முன்னுரிமை ஆகும். சிறிய ஜிம் போல தனிநபர் அக்கறை, சேவையோடு பெரிய க்ளப்புக்கான உடல் தகுதித் தெரிவுகளையும் ஒருங்கே பெற்ற வசதிகளைக் கொண்டது. எங்களது வழி முறைகள் இத் தொழில் சார்ந்த தர நிலையை பூர்த்தி செய்யும் வகையிலும், அதை மிஞ்சும் வகையிலும் ஒரு குழுவாக நாங்கள் செயல்படுகிறோம்" எனக் கூறினார்.
வரவேற்கக்கூடிய, உத்வேகம் தரக்கூடிய சூழ்நிலையோடு சமீபத்திய கருவி வகைகளையும், சான்றிதழ் பெற்ற தனிப்பட்ட பயிற்சியாளர்களையும் Talwalkars மையங்களில் பெறமுடியும் என்பதற்கும் உறுதி அளிக்கிறது. வாடிக்கையாளர்களின் பிரச்சனைகளைக் கருத்தில் கொண்டு தீர்மானமான, சலிப்பூட்டும் பயிற்சிகளைக் கடந்து வர உதவும் பொருட்டு தனிப்பட்ட பயிற்சியாளர்கள் ஸ்மார்ட் பயிற்சிகளை வடிவமைத்திருப்பது உங்கள் பயிற்சிக்கு ஒரு புத்துணர்வை ஊட்டும். அதோடு, உடல் தோற்றத்தையும் தாண்டி ஒழுக்கத்தைப் புகுத்துவதன் மூலம் தன்னம்பிக்கையை உருவாக்குவதன் மூலமும் உறுப்பினரின் அவுட்லுக்கை மாற்ற தனிப்பட்ட பயிற்சியாளர்கள் உதவுவார்கள்.
தங்களுடைய வாழ்க்கையில் நேர்மறை மாற்றத்தை உருவாக்க விரும்பும் உடல்நல உணர்வு கொண்ட வாடிக்கையாளர்கள், சந்திப்புக்கு 53636 என்ற எண்ணுக்கு FIT என குறுஞ்செய்தியோ, http://www.talwalkars.net என்கிற இணையத் தளத்தில் பதிவோ, 022-66553636 என்ற எண்ணிற்கோ இன்றே தொடர்பு கொள்ளலாம். மேலதிக விபரங்களுக்கு http://www.facebook.com/TalwalkarsIndia பக்கத்தை `லைக்' செய்யுங்கள் அல்லது http://www.twitter.com/Talwalkars ஃபாலோ செய்யுங்கள். இந்தச் சலுகை ஆகஸ்ட் 1 முதல் செப்டெம்பர் 12, 2016 வரை மட்டுமே.
Talwalkars Better Value Fitness Ltd (TBVFL) பற்றி;
80 நகரங்களில் 176 உடல் தகுதி மையங்களைக் கொண்ட இந்தியாவின் மிகப் பெரிய உடல் தகுதி நிலையம் Talwalkars Better Value Fitness Ltd ஆகும். இது ஜிம், ஸ்பா, ஏரோபிக்ஸ், உடல் ஆரோக்கியம் குறித்த ஆலோசனை என பல்வேறுவிதமான சேவைகளை `Talwalkars' என்ற ப்ராண்டின் கீழ் வழங்கி வருகிறது. இதில் 1,68,000 க்கு மேலான உறுப்பினர்கள் இருக்கிறார்கள். நாடு முழுவதும் ஜிம் வசதிகளுக்கான உள்கட்டமைப்பைக் கொண்ட Talwalkars தனது சென்றடையக் கூடிய வசதியின் உதவியால் மாற்று உடல் தகுதி வசதிகளை ஆர்வலர்களுக்கும் வழங்க பல்வேறு தன்முனைவுகளை எடுத்து வருகிறது. NuForm என்கிற கோட்பாட்டின் முன்னோடியாக, ஜெர்மனியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட எலக்ட்ரோ மஸ்குலர் ஸ்டிமுலஸ் தொழில்நுட்பத்தின் உதவியால் வாரத்திற்கு இருபது நிமிடங்களுக்கான உடற்பயிற்சித் தீர்வை இந்தியாவில் வழங்குகிறது. ஏற்கனவே தன்னிடம் உள்ள குழுவையும், உள்கட்டமைப்பையும் உபயோகித்து Zumba Fitness ஐ அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் இந்தியாவில் உடல் தகுதித் துறையில் தனது நிலையை வலுவாக்கிக் கொள்ளும் நடவடிக்கையை எடுத்திருக்கிறது. Reduce அறிமுகத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களது உடல் தகுதிக் குறிக்கோள்களை அடைய உதவுவது Talwalkarsன் நோக்கமாகும். இது பரப்பரப்பான வாடிக்கையாளர்களை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்ட டயட் அடிப்படையிலான எளிதான, ஆரோக்கியமான எடை இழப்புத் திட்டமாகும். இதன் விரிவாக்க முயற்சியில் தென் இந்தியாவில் தனது இருப்பை அதிகரிக்கும் விதமாக சென்னையை மையமாகக் கொண்டு இயங்கிவரும் Inshape Health and Fitnez Pvt Ltd (IHPL) நிறுவனத்தில் பெரும்பான்மை பங்குகளை வாங்கியிருக்கிறது. உடல் தகுதி மற்றும் உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட சேவைகளை பல்வகைப்படுத்தும் நோக்கத்துடன் Talwalkars சமீபத்தில் சென்னையை மையமாகக் கொண்டு யோகா நிலையங்களை நடத்தி வரும் Zorba வில் பெரும்பான்மை பங்குகளை வாங்கியிருக்கிறது. ஸ்ரீலங்காவை மையமாகக் கொண்டு இயங்கிவரும் Power World Gyms (PEG) ன் 49.5% பங்குகளை Talwalkars வாங்கியிருப்பதன் மூலம் தனது முதலாவது சர்வதேச நுழைவை ஆரம்பித்திருக்கிறது.
இந்தியாவில் ஜிம் என்ற கோட்பாட்டின் முன்னோடி Talwalkars தான். காலஞ்சென்ற ஸ்ரீ விஷ்ணு Talwalkars 1932 ஆம் ஆண்டு மும்பையில் முதன் முதலாக ஜிம் ஒன்றை ஆரம்பித்தார். அந்தப் பாரம்பரியத்தை Madhukar Talwalkar பின்பற்றினார். இன்றைக்கு இந்தியாவில் உடல் தகுதி என்கிற சொல்லுக்கு இணையாக அறியப்படுவது Talwalkars. 'Talwalkars' ப்ராண்ட் நாடு முழுவதும் ஜிம்களை அலிகார், ஒளரங்காபாத், பரெய்லி, பாவ்நகர், போபால், டேராடூன், ஜாம்ஷெட்பூர், ஹூப்ளி, கோலாப்பூர், கொல்கத்தா, நாசிக், மொராதாபாத், சாங்லி, சூரத், ஷோலாப்பூர், ராஜ்கோட், ராஞ்சி போன்ற பல தரப்பட்ட நகரங்களில் ஆரம்பித்து பரவலாக்கி வருகிறது.
நிறுவனத்தைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு அவர்களுடைய
இணையத்தளத்தைப் பாருங்கள் http://www.talwalkars.net
ஊடகத் தொடர்பு
Hiral Shah
[email protected]
+91-9819637300
கார்ப்பொரேட் கம்யூனிகேஷன்ஸ் மேலாளர்
Talwalkars Better Value Fitness Ltd.
Share this article