புது தில்லி, October 5, 2016 /PRNewswire/ --
UBM India வழங்கும் வட இந்தியாவின் மிகப்பெரிய நகை வர்த்தக கண்காட்சி:
- 250க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் 5ஆம் நிகழ்வை சிறப்பிக்கிறார்கள்
- Retail Jewellers Guild Awards உடைய இரண்டாம் நிகழ்வும் இந்தியாவின் சில்லரை வர்த்தக நிறுவனங்களின் பத்திரிக்கையின் பிரத்தியேக தொடக்க விழாவும்
- போக்கை உருவாக்கும் வடிவமைப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களின் கண்காட்சி மற்றும் தொடக்க விழா
UBM India நடத்திய Delhi Jewellery and Gem Fair (DJGF) உடைய 5ஆம் நிகழ்வு பிரகதி மைதான், புதுதில்லியில் 26 செப்டம்பர், 2016 ஆம் ஆண்டு வெற்றிகரமாக நிறைவடைந்தது. இந்த கண்காட்சியானது Ms. Nirupa Bhatt - மேலாண்மை இயக்குநர், GIA India and Middle East; Mr. Ramavtar Verma - தலைவர், Delhi Bullion and Jewellers Association; Mr Yogesh Shingal - செயலாளர், Delhi Bullion and Jewellers Association; Mr. Pawan Gupta - இயக்குநர் PPJ; Mr. Yogesh Mudras - மேலாண்மை இயக்குநர் UBM India மற்றும் Mr. Abhijit Mukherjee - குழு இயக்குநர் ஆகியோரால் தொடங்கி வைக்கப்பட்டது.
(Logo: http://photos.prnewswire.com/prnh/20160916/408635LOGO )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20130226/599595-c )
இந்த கண்காட்சியானது நகை துறையின் ஒருங்கிணைந்த பகுதியாக அங்கீகரிக்கப்பட்டு முக்கிய சங்கங்கள், கண்காட்சியாளர்கள் மற்றும் வாங்குநர்களை ஒரே கூரையின் கீழ் கொண்டு வருகின்றது. Delhi Jewellery and Gem Fair என்பது வட இந்தியாவின் மிகப்பெரிய B2B நகை கண்காட்சி மற்றும் இந்திய ரத்தினக்கற்கள் மற்றும் நகை துறைக்காக UBM India ஆண்டுதோறும் நடத்தும் மிகப்பெரிய நான்கு நகை கண்காட்சிகளில் ஒன்றாகும்.
இந்த மூன்று நாள் வர்த்தக கண்காட்சி 250க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்களை கொண்டு வந்து, வட இந்தியாவில் உள்ள நகை உற்பத்தியாளர்கள், சில்லரை வர்த்தகர்கள், மொத்தவியாபாரிகள், இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுடன் இணையவும் தொழில் உருவாக்கவும் செய்தது. இந்த கண்காட்சியானது பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் உத்திர பிரதேசம் மற்றும் மகராஷ்ட்ரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களின் மகத்தான வரவேற்பைப் பெற்று, இந்த கண்காட்சி ஒரு தொழிற்துறை தளம் என்பதை மதிப்பீடுசெய்தன. இந்நிகழ்ச்சிக்கு முன்னோடியாக, லக்னவ், அம்பாலா, ஜலந்தர், சண்டிகர் மற்றும் அமிர்தசரஸ் ஆகிய நகரங்களை இணைக்கும் ஒரு தொடர்ச்சியான சாலை காட்சிகள் தில்லி நிகழ்வுக்கு ஒரு விளம்பரமாக செயல்பட்டன.
Damara Gold Pvt. Ltd., Hari Krishna Exports Pvt Ltd, M/s. Bhindi Jewellers, Royal Chains Pvt. Ltd., Swarnsarita Gold & Diamonds, Unique Chains Pvt Ltd., Vikas Chain & Jewellery Pvt. Ltd, Swarnshilp Chain & Jewellers Pvt Ltd, Yamuna Diamonds, Salonki மற்றும் Lumineux UNO உள்ளிட்ட நாட்டின் நகை உற்பத்தியாளர்கள் இந்த நிகழ்வின் சிறந்த கண்காட்சியாளர்களில் உள்ளடங்குவர்.
5ஆம் நிகழ்வின் வெற்றிகரமான நிறைவு குறித்து பேசுகையில், Mr. Yogesh Mudras, Managing Director, UBM India Pvt. Ltd, இவ்வாறு கூறினார், "ஒருங்கிணைக்கப்பட்ட சில்லரைவர்த்தக நகை சந்தை என்பது இந்தியாவில் இன்னும் ஆரம்ப நிலையில் இருந்தாலும், வளர்ச்சிக்கான வாய்ப்புகள் எல்லையற்றவை. இந்த பிரிவானது புதுமையான வடிவமைப்புகள் மற்றும் நகையின் ரகங்கள் ஆகியவற்றின் தேவையில் நுகர்வோரின் விருப்பங்களோடு மாற்றங்களைக் கண்டு வருகின்றது. Delhi Jewellery and Gem Fair உடைய 5ஆம் நிகழ்வு நகை சந்தையில் மீதும் அது வழங்க இருக்கும் உணர்வூட்டும் தயாரிப்புகள் ஒரு நம்பிக்கை உணர்வை மீண்டும் வலியுறுத்தி வருகிறது. இது வரவிருக்கும் திருமணம் மற்றும் பண்டிகை காலத்திற்கு உகந்தது, இச்சமயத்தில் நகை வியாபாரிகள் அதிக விற்பனையையும் நகை வாங்க வருபவர்களின் அதிகரிக்கும் எண்ணிக்கையயும் காண்பர்கள்."
இந்த ஆண்டு இந்த கண்காட்சி Retail Jewellers Guild Awards (RJGA), என்னும் இந்தியா முழுவதிலுமான சில்லரை நகை வியாபாரத்தின் சிறந்த திறனை கௌரவிக்கும் ஒரு தனித்துவமான முயற்சியின் இரண்டாம் நிகழ்வையும் கண்டது. இதில் சில்லரைவர்த்தகர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் தங்கள் படைப்புகளை நாகரீக அணிவகுப்புகள் மூலமாக வெளிப்படுத்தினர். Avalon Global Research துணையுடன் வெளியிடப்படும் 'India's Leading Retail Jewellery Companies' என்னும் ஒரு பிரத்தியேக அறிக்கையின் இரண்டாம் பதிப்பின் வெளியீடும் இதில் இடம்பெற்றது, இது முன்னணி உற்பத்தியாளர்கள், வாங்குநர்கள் ஃப்ரான்சைஸ் மேலாளர்கள், வங்கி அதிகாரிகள் மற்றும் உயர்ந்த நிகர-மதிப்புள்ள இறுதி பயனர்கள் ஆகியோரின் மனதில் முதன்மையாக சில்லரை நகை வியாபாரத்தை வைக்கும்.
'Retail Jewellers Guild Awards 2016' உடைய வெற்றியாளர்கள் :
வ.எண் பிரிவு உப பிரிவு வெற்றியாளர்
சிறந்த வாடிக்கையாளர் விற்பனை செயல்முறை
1 சேவை முயற்சிகள் Kashi Jewellers
Titan Company
சிறந்த வாடிக்கையாளர் Limited - Jewellery
2 சேவை விற்பனைக்கு பின் முயற்சிகள் Division
தனிக்கடை - 1000 சது.
3 ஆண்டின் சிறந்த கடை அடிக்கு குறைவு Belisma
தனிக்கடை - 1000 - 5000 DIACOLOR
4 ஆண்டின் சிறந்த கடை சது.அடி Contemporary Jewels
தனிக்கடை - 5000 சது.
5 ஆண்டின் சிறந்த கடை அடிக்கு அதிகம் A S Motiwala
கடை சங்கிலி - 10 கடைக்கு
6 ஆண்டின் சிறந்த கடை குறைவு Motisons Jewellers
கடை சங்கிலி - 10 கடைக்கு Waman Hari Pethe
7 ஆண்டின் சிறந்த கடை மேல் Jewellers
மிகவும் புதுமையான B R Designs Pvt
8 மார்கெட்டிங் பிரச்சாரம் 300 டிகிரி Ltd.
மிகவும் புதுமையான
9 மார்கெட்டிங் பிரச்சாரம் டிஜிட்டல் Murlidhar Jewellers
மிகவும் புதுமையான
10 மார்கெட்டிங் பிரச்சாரம் அனுபவங்களை / செயல்படுத்தல் Reliance Jewels
மிகவும் புதுமையான Khurana Jewellery
11 மார்கெட்டிங் பிரச்சாரம் பிரிண்ட் House
மிகவும் புதுமையான Motisons Jewellers
12 மார்கெட்டிங் பிரச்சாரம் ரேடியோ Ltd.
G R Thanga Maligai
மிகவும் புதுமையான Jewellers (India)
13 மார்கெட்டிங் பிரச்சாரம் டிவி Pvt Ltd
14 ஆண்டின் சிறந்த முதலாளி Kashi Jewellers
Shobha Asar
15 சிறப்பான வடிவமைப்பு டயமண்ட் ஜுவல்லரி Jewellery Pvt. Ltd
Waman Hari Pethe
16 சிறப்பான வடிவமைப்பு கோல்ட் ஜுவல்லரி Jewellers
Waman Hari Pethe
17 சிறப்பான வடிவமைப்பு சில்வர் ஜுவல்லரி Jewellers
Waman Hari Pethe
18 சிறப்பான வடிவமைப்பு பிளாட்டினம் ஜுவல்லரி Jewellers
19 சிறப்பான வடிவமைப்பு ஜதவ் ஜுவல்லரி Kashi Jewellers
20 வாழ்நாள் சாதனை விருது Govind Dholakia
ஆண்டின் சிறந்த பெண்
21 தொழிலதிபர் Smriti Bohra
ஆண்டின் சிறந்த
22 தொழிற்துறை போராளி Yash Agarwal
UBM India பற்றி
UBM India என்பது இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் அது கண்காட்சிகளின் தொகுப்பு, உள்ளடக்கங்களினால் வழிநடத்தப்படும் மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள், மூலமாக உலகெங்கும் இருந்து வாங்குபவர்களையும் விற்பவர்களையும் ஒன்று சேர்க்கும் தளங்களைஅளிக்கிறது. UBM India ஆண்டுதோறும் நாடு முழுவதும் 25 பெரிய அளவு கண்காட்சிகளையும், 40 மாநாடுகளையும் அளிக்கிறது; இதன் மூலம் பல நிறுவன பிரிவுகளில் வணிகத்தை செயல்படுத்துகின்றது. ஒரு UBM Asia நிறுவனமான, UBM இந்தியாவுக்கு மும்பை, புது தில்லி, பெங்களூரு மற்றும் சென்னையில் அலுவலகங்கள் இருக்கின்றன. UBM ஆசியா லண்டன் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள UBM Plcக்கு சொந்தமானது. UBM Asiaவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளராகவும் சீனாவின் பெருநிலப்பகுதியிலும், இந்தியா மற்றும் மலேசியா நாடுகளில் வர்த்தக ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு, தயவு செய்து வருகை தாருங்கள்ubmindia.in.
ஊடக தொடர்பு:
Mili Lalwani
[email protected]
+91-22-61727000
UBM India
Share this article