டிசம்பர் 9 - 11 வரை பிரகதி மைதானில் நடைபெறவிருக்கும் ஸாக் டோர்ஸ் & விண்டோஸ் எக்ஸ்போவில்(Zak Doors & Windows Expo) கதவுகள், ஜன்னல்கள் மற்றும் கட்டிட முகப்புகளின் புதுமையான கண்டுபிடிப்புகள் காட்சிக்கு வைக்கப்படும்
புது டெல்லி, November 28, 2016 /PRNewswire/ --
ஜன்னல்கள், கதவுகள் மற்றும் கட்டிட முகப்புகள் மற்றும் அதன் சம்பந்தமான சேவைகளில் உள்ள புதுமையமான கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தி பயனர்களையும், சேவை வழங்குபவர்களையும் கவர்ந்திழுக்கும் ஜாக் டோர்ஸ் & விண்டோஸ் எக்ஸ்போ மீண்டும் வந்துள்ளது. உலகம் முழுவதிலும் கட்டிட முகப்புகள் மற்றும் ஜன்னல்கள் அமைப்பதிலும், உபகரணங்கள் மற்றும் தயாரிப்பு தொழில்நுட்பத்திலும் சிறந்த பெயர்பெற்ற ஜாக், அவர்களுடைய எப்பொழுதும் புதுமையான தயாரிப்புகளின் புதிய வரிசையை காட்சிப்படுத்தும் வகையில், இந்தியாவின் மிகப்பெரிய கதவு, ஜன்னல்கள் மற்றும் கட்டிட முகப்புகளுக்கான தீர்வுகளின் கண்காட்சியின் 13-ஆவது பதிப்பை புது டெல்லியில் நடத்த ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது. இந்தக் கண்காட்சி, 2016 டிசம்பர் 9 - 11 வரை இந்தியாவின் மிகப்பெரிய கண்காட்சி மற்றும் மாநாட்டு மையம் - பிரகதி மைதானில் நடைபெற உள்ளது. இந்த கண்காட்சி, பயனர்களையும் உற்பத்தியாளர்களையும், நேருக்கு நேர் கொண்டுவந்து, கட்டிடக்கலை வல்லுனர்களின் அழகியல் சார்ந்த லட்சியங்களை எட்ட உதவி செய்து, கட்டிட உருவாக்கிகளுடைய கனவுகளுக்கு ஒரு புதிய அர்த்தத்தை அளிக்கிறது. இந்தத் தொழில்நுட்பங்களை உற்பத்தி செய்வதில் முதலீடு செய்ய விரும்பும் தொழில் முனைவர்களுக்கும் இது ஒரு நல்ல வாய்ப்பாகும்.
தனது 15-ஆவது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ஜாக் கண்காட்சியில், 3 தொடர்புடைய கண்காட்சிகள் இடம்பெறும், அவை, கண்ணாடி தயாரிப்புகள், உற்பத்தி, சுத்திகரிப்பு மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் கட்டுமானத்திற்காக கண்ணாடியைப் பயன்படுத்துவதை மறுவரையறைப்படுத்துவதற்கான 14-வது சர்வதேச ஜாக் க்ளாஸ் டெக்னாலஜி எக்ஸ்போ, அலுமினியம் எகிஸ்ட்ரூஷன்கள், தொழில்நுட்பங்கள், பயன்பாடுகள் மற்றும் அவற்றைச் சார்ந்த தயாரிப்புகளின் 8-ஆவது சர்வதேச ஜாக் அலுமினியம் எக்ஸ்ட்ரூஷன்ஸ் எக்ஸ்போவுடன் கூடிய ஜாக் டோர்ஸ் & விண்டோஸ் எக்ஸ்போவின் 13-ஆவது பதிப்பும் இணைந்து, கட்டிடத் துறையின் பயன்பாட்டு தொழில் துறையின் தேவைகளைப் பூர்த்தி செய்யும்.
"இத்துறையில் அறிதலையும். சமீபத்திய தொழில்நுட்பம் மற்றும் தீர்வுகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த நட்புறவு செயல்முறைகளின் வாயிலாக துறைகளுக்கு மத்தியிலான உரையாடல் மற்றும் தகவல் பகிர்தலை ஊக்குவிப்பதை குறிக்கோளாகக் கொண்டிருக்கும் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் இந்த கண்காட்சி அமையும்", என்று இந்த முக்கிய நிகழ்ச்சியின் அமைப்பாளர்களாகிய Zak Trade Fairs and Exhibitions-இன் இயக்குனர், Mr. Syed Ahad Ahmed கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது," கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பில் அடுத்த தலைமுறை மாற்றங்களை உதாரணப்படுத்தும் வகையில், இந்த கண்காட்சியில் பார்வையாளர்களுக்கு செயல்முறை விளக்கங்களும் இயல்புறு மாதிரிகளும் காட்டப்படும். டெக்ஸ்டைல் சூரிய பாதுகாப்புத் திரைகள், பனோரமிக் முகப்பு வடிவமைப்புகள், மோட்டரைஸ் செய்த மடியும் ஷட்டர்கள், முகப்புகளுக்கான நீட்டிக்கப்பட்ட மெஷ், வெளிப்புற கிளாடிங் தீர்வுகள், எல்இடி பதிக்கப்பட்ட கைப்பிடிச் சுவர்கள், உயர் செயல்திறன் கொண்ட ஸ்லைடிங் ஜன்னல்கள் இன்னும் பல புதிய தயாரிப்புகள் இந்த ஆண்டு காட்சிப்படுத்தப்படும். கூடுதலாக, அடிமட்டத்திலிருந்து, தொழில்துறையின் முக்கிய முனைவர்கள் வரையிலான கருத்துப் பரிமாற்றத்தை ஊக்குவிக்க கருத்தரங்குகளும் பயிற்சிப் பட்டறைகளும் ஏற்பாடு செய்யப்படும்."
அலுமினியம் கதவுகள், ஜன்னல்கள் மற்றும் திரைச்சுவர் அமைப்புகள் ஆகியவற்றில் சர்வதேச முன்னணி நிறுவனமாகிய ஷியூகோ-வே இந்த நிகழ்ச்சியின் முதன்மைப் பங்குதாரர் ஆகும். அவர்கள் தங்களுடைய சராசரி கட்டிட முகப்பு மற்றும் சாளர வரிசையாக்க வகைகளைத் தவிர, புதிய வகை லிஃப்ட் அண்ட் ஸ்லைட் கதவுகள், பனோரமா முகப்பு வடிவமைப்பு ஆகியவற்றையும் அறிமுகப்படுத்துகிறார்கள்.
இந்தக் கண்காட்சியின் 2015 பதிப்பு, 600-க்கும் மேலான இந்தியா மற்றும் சர்வதேச அளவிலான பிராண்டுகளின் 350-க்கும் அதிகமான கண்காட்சியாளர்களையும், 24,000-க்கும் அதிகமான பார்வையாளர்களையும் ஈர்த்தது.
ஜாக் டிரேட் ஃபேர்ஸ் அண்ட் எக்ஸிபிஷன்ஸ்-ஐப் பற்றி
ஜாக் க்ளாஸ் டெக்னாலஜி, ஜாக் டோர்ஸ் & விண்டோஸ் எக்ஸ்போ மற்றும் அவர்களது முன்னணி ஊடாடு மாநாடுகளாகிய ஜாக் வேர்ல்ட் ஆஃப் ஃபசாட்ஸ் மற்றும் ஜாக் வேர்ல்ட் ஆஃப் விண்டோஸ் ஆகிய கண்காட்சி மற்றும் வர்த்தகக் காட்சிகளின் மூலமாக கண்காட்சிக் கூடாரங்கள் அமைப்பதில் ஒரு முன்னுதாரணமான மாற்றத்தைக் கொண்டுவரும் நோக்கோடு பணிபுரியும் முன்னணி வர்த்தகக் காட்சி மற்றும் கண்காட்சி அமைப்பாளர்களில் ஜாக் குழுவும் ஒன்றாகும். புதுப்புனைவை ஊக்குவிக்கவும் கட்டிடக்கலையின் தரத்தை உயர்த்தவும், உற்பத்தியாளர்கள், புதுமைப் புனைவர்கள், பகிர்ந்தளிப்பவர்கள்/டிஸ்ட்ரிபியூட்டர்கள் மற்றும் கட்டமைப்பாளர்களை ஒரே கூரையின் கீழ் ஜாக் இணைக்கிறது. 1994-இல் நடத்திய முதல் கண்காட்சியிலிருந்து, தெற்காசியா, மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்காசியாவின் பல பகுதிகளில், 22 பல்வேறு தொழில் துறைகளின் 490-க்கும் மேற்பட்ட கண்காட்சிகளையும் மாநாடுகளையும் ஜாக் நடத்தியுள்ளது.
ஊடகத் தொடர்பாளர்:
Esha Sharma
Zak Trade Fairs & Exhibitions Pvt. Ltd.
[email protected]
+91-11-42576205
Share this article