பெங்களூர், April 14, 2017 /PRNewswire/ --
2018 நிதியாண்டு முடிவில் இந்த நிறுவனம் புதிய தளம் மற்றும் சேவைகளிலிருந்து ரூ 500 கோடி அடைவதைத் திட்டமாகக் கொண்டுள்ளது
எளிமையான மத்தியதர குடும்பங்களின் சமையலறைகளிலிருந்து இந்தியாவின் 5 நட்சத்திர ஹோட்டல்களின் பாண்ட்ரி வரை விரும்பப்படுகிற பலசரக்கு கூட்டாளியாக தன்னை bigbasket நிறுவியிருக்கிறது. இன்னொரு மைல்கல் என்னவெனில், BIGBASKET அதனுடைய B2B உணவு சேவை தொழிலான இறைச்சி, பிரைவேட் லேபிள்கள், ஸ்டேபில்ஸ், பழங்கள் & காய்கறிகள் மற்றும் தனிச்சுவை (gourmet) பொருட்களை HoReCa (ஹோட்டல்ஸ், உணவுவிடுதிகள் மற்றும் கேடரர்கள்) வுக்கு விற்பனை செய்ததின் மூலம் 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைந்த ஓராண்டில் ரூ 100 கோடி வருமானத்தை எட்டியிருக்கிறது. இந்த வணிகத்தைத் தேசிய அளவில் விரிவாக்கம் செய்ய இந்நிறுவனம் அடுத்த 12 மாதங்களில் ரூ 50 கோடி முதலீடு செய்யவிருக்கிறது.
(Logo: http://photos.prnewswire.com/prnh/20150911/10130176 )
HoReCa வணிகம் 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆரம்பிக்கப்பட்டது. இது ஏற்கனவே பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கு விரும்பத்தக்க சப்ளையராக பல சிறந்த ஹோட்டல் குழுமங்கள், மல்ட்டி-குசைன் ரெஸ்டாரெண்ட்கள், கேட்டரர்கள் ஆகி தனது ஆரம்பகால வெற்றியை சுவைக்க ஆரம்பித்திருக்கிறது. Meridien, JW Marriott, Sheraton, மற்றும் Westin ஆகிய ஹோட்டல்கள் BIGBASKETடின் முக்கியமான க்ளையண்டுகளின் ஒரு பகுதியாகும். இவர்கள் ஏற்கனவே பலதரப்பட்ட பொருட்களை இந்த ஈ-ரீடெய்லர் -யிடமிருந்து வாங்கிவருகிறார்கள். முன்னணி தொழில் சார்ந்த கேட்டரர் ஆன Sodexo, CSS, HMS Host ஆகியவையும் ரெஸ்டாரெண்ட் குழுமங்களான Vasudev Adiga's, Barbeque Nation, Punjabi by Nature, Nandhana, Wow! Momo என பல்வேறு வகையான தொழில்பிரிவுகளிலும் க்ளையண்ட்களைக் கொண்டிருக்கிறது. கார்ப்பொரேட் நிறுவனங்களில் Tata Motors, Bosch, Bhartiya, Cisco, Airbus போன்றவையும் அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் பான்ட்ரி பொருட்களை BIGBASKETடிலிருந்து வாங்குகிறார்கள்.
விரிவாக்கத் திட்டங்கள் பற்றி Mr. Abhinay Choudhari, துணை நிறுவனர் மற்றும் தலைமை New Initiatives தனது அறிக்கையில், '‘ஏற்கனவே BIGBASKET B2C மற்றும் B2B பிரிவுகளில் உள்ள உபயோகிப்பாளர்களின் விரும்பத்தக்க பலசரக்குக்காரராக இருந்து வருகிறது. இப்போது வழங்கும் பொருட்களோடு, இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சி, ஆர்கானிக் காய்கறிகள், பிரைவேட் லேபிள் ஸ்டேபில்ஸ், HoReCa வுக்குத் தேவையான தனிச்சுவை பொருட்கள் என எங்களது ரேஞ்சை விரிவாக்கம் செய்யவிருக்கிறோம். தொழிலை விருத்தி செய்யும் நோக்கத்தோடு அர்பணிக்கப்பட்ட விநியோக மையங்களை 8 நகரங்களில் அமைக்க இருப்பதோடு 2018 ஆம் ஆண்டு நிதியாண்டின் முடிவில் ரூ 500 கோடி வருமானத்தை அடையவும் திட்டமிட்டிருக்கிறோம்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
BIGBASKETடின் மகிழ்ச்சியான நுகர்வோர்களில் ஒருவரான Mr. Vijaya Bhaskaran, செஃப் at Le Meridien, Bangalore, '‘எங்களது ஹோட்டலுக்குத் தேவையான தினசரி தேவைகளை BIGBASKETடிலிருந்து கொள்முதல் செய்யும் அனுபவம் மிகவும் திருப்திகரமாக இருக்கிறது. சரியான விலையில், சரியான நேரத்தில் தரமான பொருட்களை வாங்குவது என்பது செஃப் களுக்கு எப்போதுமே சவாலான ஒரு காரியமாகும். BIGBASKET மதிப்புமிக்க கூட்டாளியாக ஆனதிலிருந்து கொள்முதல் சம்பந்தப்பட்ட செயல்முறைகள் மிகவும் எளிதாகிவிட்டது. ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்வது மிகவும் செளகரியமாக இருப்பதோடு டெலிவரியும் எப்போதும் சரியான நேரத்தில் செய்யப்பட்டு விடுகிறது. ஏதேனும் பிரச்சனை எனில் BIGBASKETடின் திறமையான குழு உடனடியாக அதை நிவர்த்தி செய்துவிடுவார்கள். நாங்கள் BIGBASKETடுக்கு மாறியதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். செஃப்ஸ் சமூகத்துக்கு நான் BIGBASKETடை அதிகப்படியாகவே பரிந்துரைக்கிறேன்" என்றார்.
ஐந்தாண்டு ஆன தொடக்கநிலை வணிகமானது OYO rooms களுடனும் ஒப்பந்தம் வைத்திருக்கிறது. இந்தத் தளத்தின் மூலம் OYO roomsன் நூற்றுக்கும் மேற்பட்ட சொத்துகள் BIGBASKETடிடமிருந்து நேரடியாக ஆர்டர் செய்கின்றன.
Mr. Abhinay Choudhari, "HoReCa பிரிவுக்காக ஆர்டர் செய்வதிலிருந்து, டெலிவரி, பொருட்கள் மேலாண்மை வரை முழுவதும் தொழில்நுட்ப அடிப்படையிலான தீர்வைக் கொண்டிருக்கும் முதல் இந்திய நிறுவனம் BIGBASKET ஆகும். 25 நகரங்களில் நாங்கள் செயல்படுவதால், அனைத்துப் பொருள் தொகுதிகளிலிருக்கும் அனைத்துப் பொருட்களுக்குமான `ஒன் - ஸ்டாப் - ஷாப் (ஒரே சப்ளையர்) ஆக எங்களால் இருக்க முடியும். 24/7 ஆன்லைன் MIS வாயிலாக கொள்முதல் செயல்பாடு சம்பந்தப்பட்ட விலை, கொள்முதல், இன்வாய்ஸ் போன்றவற்றை ஒளிவு மறைவில்லாமல் நாங்கள் வழங்குவதால் நிர்வாகச் செலவு மற்றும் கசிவுகளைக் குறைவதோடு கட்டுப்படுத்தவும் முடியும். சிஸ்டத்தில் நாங்கள் கார்ப்பொரேட் படிநிலையை அம்மா-குழந்தை உறவுமுறையில் நிறுவி ஒவ்வொரு ப்ராப்பர்ட்டியும் செய்யும் தினசரி கொள்முதலை கட்டுப்படுத்தவும், பல ப்ராப்பர்ட்டிகள் செய்யும் கொள்முதலுக்கான இன்வாய்ஸ்களை ஒருங்கிணைத்து மத்திய அலுவலகம் / தலைமை அலுவலகம் பணம் செலுத்தும்படியான வசதியும் இருப்பதால் ரீகன்சைல் செய்வதற்கும், பணப்பட்டுவாடா செய்வதிலும் இருக்கும் நிர்வாகச் செலவுகளைக் குறைக்க முடியும். எங்களுடைய ஆர்டர் கையாளும் தொழில்நுட்பமும், டெலிவரி செய்வது சம்பந்தப்பட்ட உள்கட்டமைப்பும் நிலைத்தன்மையையும், கணிப்பையும் வழங்குவதால் மனித இடையீடு இல்லாமால் மேம்பட்ட சேவையை வழங்கமுடியும்" என்றார்.
Mr. Murali Murthy, செஃப் நிர்வாகி, HMS Host Bangalore குறிப்பிடுகையில், '‘அவர்களுடைய தரமான பொருட்களுக்காக BIGBASKETடை நான் பாராட்டுகிறேன். BIGBASKETடின் தொடர்பு எங்களுடைய செயல்பாட்டை மேலாண்மை செய்வதில் எங்களுக்கு ஓரளவுக்கு உதவியது. ஆன்லைன் ஆர்டரிங் சம்பந்தப்பட்ட செயல்பாடு மிகவும் அருமையாக இருக்கிறது. BIGBASKET குழுவிடமிருந்து தொழில்ரீதியாலான அணுகுமுறையில் எங்களுக்கு எப்போதும் எதிர்வினை கிடைப்பதுண்டு"
BIGBASKET பிரைவேட் லேபிள்களை தனது வலுவான தொழில்நுட்ப அடிப்படையிலான சேவை மாடலின் பின்னனியில் நேரடியாக வாங்கமுடிவது அதற்கிருக்கும் அனுகூலம் ஆகும். பழங்களும், காய்கறிகளும் நாடெங்கிலும் இருக்கும் தங்களுடைய சேகரிப்பு மையங்களில் விவசாயிகளிடமிருந்து நேரடியாக வாங்கப்படுவது ஒரு தெளிவான வித்தியாசம் ஆகும். ஆன்லைன் டெலிவரியும், ஆன் த ஸ்பாட் ரிடர்ன் செயல்பாடும் செஃப் அல்லது குடும்பத்தலைவி என யாராக இருந்தாலும் அவர்களது வாழ்க்கையை எளிதாக்குகிறது.
தற்போது, இந்தியாவெங்கிலும் 25 நகரங்களுக்கும் மேலான இடங்களில் பதிவு செய்யப்பட்ட 4 மில்லியன் வாடிக்கையாளர்களை BIGBASKET கொண்டிருக்கிறது. அன்போடு `bigbasketeers' என அழைக்கப்படும் இதனுடைய வாடிக்கையாளர்கள், 1000 பிராண்டுகள் உள்ளடக்கிய 20000 பொருட்களை - ஃப்ரெஷான பழங்கள், காய்கறிகள், அரிசி, பருப்பு, மசாலா, பாக்கேஜ்டு பொருட்களுக்கான சீசனிங், குடிபானங்கள், பெர்சனல் கேர் பொருட்கள், இறைச்சி என பரந்த சேகரிப்பிலிருந்து தெரிவு செய்து கொள்ள முடியும். தன்னுடைய இணையத்தளத்திலும், மொபைல் செயலியும் தொடர்ந்து இந்நிறுவனம் சிறப்பம்சங்களை சேர்த்து வருகிறது. அனலிட்டிக்ஸை உபயோகிப்பதன் மூலம் வாடிக்கையாளர் தனது மாத பலசரக்குக் கொள்முதலை மூன்று நிமிடத்திற்குள் முடித்து கொள்ளஅனுமதிக்கும் வகையிலான `SmartBasket' என்கிற அம்சத்தின் மூலம் சிறந்த ஷாப்பிங் அனுபவத்தை வழங்குகிறது.
BIGBASKET பற்றி:
2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் V S Sudhakar, HariMenon, Vipul Parekh, V S Ramesh மற்றும் Abhinay Choudhari உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட குழுவால் பெங்களூரில் BIGBASKET ஆரம்பிக்கப்பட்டது. ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் சில்லறை வணிகத்தில் அனுபவம் கொண்ட இந்தக் குழுவினர் இந்தியாவின் முதல் மின்வணிகத் தளமான FabMart.com ஐ 1999 ஆம் ஆண்டு ஆரம்பித்தார்கள். அதன் பின், தென்னிந்தியாவெங்கிலும் Fabmall - Trinethra பெயரில் 200க்கும் மேலான பலசரக்கு சூப்பர்மார்க்கெட்டை நிறுவினார்கள். பதிவு செய்யப்பட்ட 4 மில்லியன் நுகர்வோர்களுக்கு சேவைசெய்து வரும் BIGBASKET 1000 க்கும் மேற்பட்ட ப்ராண்டுகளின் 20,000க்கும் மேற்பட்ட பொருட்களை விற்பனை செய்து வரும் இந்தியாவின் மிகப் பெரிய ஆன்லைன் சூப்பர்மார்க்கெட்டாக வளர்ச்சியடைந்திருக்கிறது. பெங்களூர், ஹைதராபாத், மும்பை, புனே, சென்னை, டெல்லி - என்சீஆர் உட்பட நாடெங்கும் 30 நகரங்களில் செயல்பட்டு வரும் இந்நிறுவனம் விரைவில் இன்னும் பல நகரங்களுக்கும் தங்களது சேவையை விரிவாக்கத் திட்டமிட்டிருக்கிறது. BIGBASKETடின் ஆன்லைன் ஃபுட் ஸ்டோர் ஃப்ரெஷான பழங்கள் மற்றும் காய்கறிகள், பலசரக்கு மற்றும் ஸ்டேபில்ஸ், குடிபானங்கள், ப்ரெட், டெய்ரி மற்றும் முட்டை சம்பந்தமான பொருட்கள், ப்ராண்டட் உணவுவகைகள், இறைச்சி, பெர்சனல் கேர் மற்றும் வீட்டிற்குத் தேவையான பொருட்கள் என பல பொருட்களை பல்வேறு பிரிவுகளின் கீழ் வழங்கி வருகிறது. வாழ்க்கையை எளிதாக்குவதற்கும் பலசரக்கு ஷாப்பிங்கை உற்சாகத்துடன் செய்வதற்கும் BIGBASKET தன்னை அர்பணித்திருக்கிறது.
ஊடகத் தொடர்பு:
Paromita Sarkar
[email protected]
+91-9650431542
Talking Point Communications
Share this article