Jindal Global University, வியென்னாவில் உள்ள UN குழுவிடம் ஆன்லைன் குற்றங்களை எதிர்த்துப் போராட அழைப்பு விடுக்கிறது
சோனிபட், இந்தியா மற்றும் வியென்ன, May 30, 2017 /PRNewswire/ --
ஆன்லைன் தொடர்பு மற்றும் டிஜிட்டல் பணப்பரிமாற்றங்களின் அதிகமான ஊடுருவல் உலகை மாற்றியமத்துள்ள போதும், அது, டிஜிட்டல் கலவின் அபாயங்கள், இணையதள தாக்குதல், பாலியல் காரணமாக மிரட்டிப் பணம் பறித்தல் மற்றும் ஆன்லைன் துரோகம் போன்ற கண்ணுக்குப் புலப்படாத பல அச்சுறுத்தல்களையும் ஏற்படுத்தியுள்ளது.
O.P. Jindal Global University (JGU)-வின் Jindal Institute of Behavioural Sciences (JIBS), சமீபத்தில் வியென்னாவில் நடந்த Commission on Crime Prevention and Criminal Justice (CCPCJ)-வின் 26-ஆவது அமர்வில், இந்த அச்சுறுத்தல்களைச் குறிப்பிட்டுச் சுட்டிக்காட்டுவதில் முன்னணி வகித்தது. இந்த சர்வதேச மாநாட்டில் ஒரே பல்கலைக்கழகப் பங்கேற்பாளரான JGU, World Society of Victimology மற்றும் Centro Nationale de Prevenzione e Difesa Sociale ஆகியவற்றுடன் இணைந்து "Victims of Online Communication(ஆன்லைன் தொடர்பினால் பாதிக்கப்பட்டவர்கள்)" மற்றும் 'Psychosocial and Cultural Aspects leading to Digital Piracy(டிஜிட்டல் களவிற்கு வித்திடும் மனவியல் மற்றும் கலாச்சாரக் கூறுகள்)' ஆகிய இரண்டு துணை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தது.
உறுப்பினர் மாநிலங்கள், குடியுரிமை சமூகம், கல்வித்துறை மற்றும் சர்வதேச நிறுவனங்களின் பிரதிநிதிகளாக 32 நாடுகளிலிருந்து 1000-த்திற்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் இந்த United Nations Office on Drugs and Crime (UNODC)-இன் நிர்வாக அமைப்பாகச் செயல்படும் (CCPCJ)-யின் 26-ஆவது அமர்வில் பங்கேற்றன.
இந்த கருத்தரங்கு ஒரு உயர் நிலை ஆரம்ப அமர்வோடு தொடங்கியது, இதைத் தொடர்ந்து கருப்பொருள் சார்ந்த பட்டிமன்றங்களும், குற்றத் தடுப்பு முறைகளை ஆராய்தலும், பொதுமக்கள் பங்கேற்பும், சமூக கொள்கைகள் மற்றும் சட்டத்தின் விதிமுறைகளுக்கு ஆதாரமாக கல்வியளித்தல் ஆகியவை நடந்தன. ஆரோக்கியம் மற்றும் நீதி, குடிபெயர்ந்தோரைக் கடத்துதல், சாந்தமான எல்லோரையும் உள்ளடக்கிய சமூகங்களைப் பேணுதல், சைபர் குற்றம், நீடித்து நிற்கக்கூடிய முன்னேற்றக் குறிக்கோள்கள், நகர்புற குற்றத் தடுப்பு, சிறைச்சாலைகள், கொள்கலன் கட்டுபாடு மற்றும் பெண்சிசுக் கொலை ஆகியவை CCPCJ-யில் நடந்த துணை நிகழ்ச்சிகளில் இடம்பெற்ற விஷயங்களாகும்.
JIBS-இன் முதன்மை நிர்வாகியான Dr. Sanjeev P. Sahni, சைபர் பின்பற்றுதல், சைபர் கேலி செய்தல், பாலியல் காரணமாக பணம் பறித்தல், ஆபாசப் படைப்புகள் மற்றும் ஆன்லைன் துரோகம் ஆகியவற்றின் பல்வேறு விதமான ஆன்லைன் பாதிப்படைந்தவர்கள் பற்றிப் பேசினார். அவர் டிஜிட்டல் களவைச் சுற்றியுள்ள சிக்கல்களைச் சுட்டிக்காட்டி, இந்த டிஜிட்டல் களவின் நுணுக்கங்களைப் புரிந்துகொள்ள வரிவான ஆராய்ச்சியும் பயிற்சியும் தேவை என்பதையும் அடிக்கோடிட்டுக் காட்டினார்.
தெற்கு ஆஸ்திரேலியாவின் பாதிக்கப்பட்டவர் உரிமைக் கமிஷனராகிய, Michael O' Connell, ஆன்லைன் தொடர்புகளில் இருக்கும் சட்டரீதியான நெறிமுறை சார்ந்த சிக்கல்களை கலந்தாலோசித்தார், மேலும் வளரிளம் பருவத்தினரே ஆன்லைன் ஊழல்களில் முதன்மை பலிகள் என்றும் கூறினார். கருத்தரங்கில் பேசிய World Society of Victimology-இன் உப கமிஷனராகிய Sarah Fletcher, ஆன்லைன் தொடர்பில் பலியானவர்களுடைய உரிமைகளைப் பற்றி விரிவாகப் பேசினார். மேலும் அவர், நிதி நிறுவனங்களின் உதவி மட்டுமல்லாமல், பலியானவர்களுக்கு ஏமாற்றத்திற்குப் பிறகு ஆறுதலளிப்பதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார்.
Jindal Global Law School -ன் துணை பேராசிரியர், Dr. Indranath Gupta, டிஜிட்டல் களவை கட்டுப்படுத்துவதற்கான சட்ட நடவடிக்கைகளும், அவற்றின் குறைபாடுகளையும் பற்றி கூறினார். குடிமக்கள் மத்தியில் பொதுவான விழிப்புணர்வும், வலுவான செயலுறுத்தலுமே டிஜிட்டல் களவின் பிரச்சினையை கையாளும் வழி என்று பரிந்துரைத்தார்.
Centre for Victimology and Psychological Studies of JIBS-இன் துணை நிர்வாகியான Ms. Garima Jain, 'Internet Infidelity: Victims of Digital Age(இணையதள துரோகம்: டிஜிட்டல் யுகத்தின் பலியாடுகள்)' மற்றும் 'Psychosocial and Cultural aspects affecting Digital Piracy in India, Serbia and China (இந்தியா, செர்பியா மற்றும் சைனாவில் டிஜிட்டல் களவை பாதிக்கும் மனவியல் மற்றும் கலாசார கூறுகள்)' போன்றவற்றைக் குறித்த அனுபவக் கல்வியை வழங்கினார். இந்த ஆய்வு, மக்கள் ஆன்லைன் துரோகத்தில், நண்பர்களின் நிர்பந்தம், சமூகத்தில் தனிமை அல்லது முக்கிய உறவுகளால் உண்டாகும் மனவியல் பாதிப்பு காரணமாகவே ஈடுபடுகிறார்கள் என்று காட்டியது.
சட்டத்திற்குப் புறம்பான போதை மருந்துகள் மற்றும் சர்வதேச குற்றங்களுக்கு எதிராகப் போராடும் உலகத் தலைமை அமைப்பாகிய UNODC, United Nations Drug Control Programme (ஐக்கிய நாடுகள் போதைப்பொருள் கட்டுப்பாட்டுத் திட்டம்) மற்றும் தனது உலகெங்கிலும் அமைந்துள்ள பரந்த கள அலுவலகங்களின் வாயிலாக உலகின் அல்ல பகுதிகளிலும் பணிபுரியும் Centre for International Crime Prevention (சர்வதேச குற்றத் தடுப்பு) ஆகியவற்றின் இணைப்பால் 1997-இல் நிறுவப்பட்டது. Commission on Crime Prevention and Criminal Justice (CCPCJ) Economic and Social Council (ECOSOC)-இன் தீர்மானம் 1992/1-ஆல் நிறுவப்பட்டது. இந்தக் கமிஷன், ஐக்கிய நாடுகளின் குற்றத் தடுப்பு மற்றும் நீதித் துறையில் ஒரு முதன்மை கொள்கை உருவாக்கும் அமைப்பாகச் செயல்படுகிறது.
Jindal Institute of Behavioural Sciences (JIBS)-ஐப் பற்றி:
Jindal Institute of Behavioural Sciences (JIBS), சமூக அறிவியல், உளவியல் ஆரோக்கியம், தகுதியுடைமை விவரணையாக்கம், நரம்பியல், நரம்புசார் முடிவியல், அறிதலியல், மனநல இயற்பியல் மேம்பாட்டியல், தடயவியல், சமூக உளவியல், குற்றவாளிகளின் நடவடிக்கைகள் போன்ற பரந்த பிரிவுகளில் பயன்முறைசார், மற்றும் செயல்முறைசார் நடவடிக்கையியலுக்குத் தொடர்புடைய ஆராய்ச்சி மற்றும் கற்றலுக்காக தொடர்ச்சியான சோதனைகளைச் செய்வதன் மூலம் மனித செயல்பாட்டு தகுதியுடைமையை புரிந்து கொண்டு, மேம்படுத்தி அதனை பயன்முறையாக்குவதற்கு அற்பணித்துக்கொண்ட O.P. Jindal Global University-யின் ஒரு மதிப்பு அடிப்படையிலான ஆராய்ச்சி மையமாகும்.
ஊடகத் தொடர்பு:
Kakul Rizvi
Additional Director, Communication and Public Affairs
O.P. Jindal Global University
[email protected]
+91-8396907273
Share this article