புது டெல்லி, June 27, 2017 /PRNewswire/ --
பிரதம மந்திரி 2015ல் அறிமுகம் செய்த டிஜிட்டல் இந்தியா பிரசாரம், உலகளாவிய தொழில்நுட்ப முன்னேற்றங்கள் இந்தியாவிலும் ஏற்படும் என்கிற நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. இந்த வழித்தடங்களைப் பின்பற்றி டெல்லியைச் சேர்ந்த FinTech Company, RealCash Technologies Limited ஆன்லைனில் கட்டணங்களைச் செலுத்தும் சந்தையில் கவனம் செலுத்துவதற்காக உருவாகியுள்ளது. இந்தியாவை டிஜிட்டல்மயமாக்குவதற்கான முக்கியமான முயற்சியாகக் கருதப்படும் ரியல் கேஷ் டெக்னாலஜீஸ் லிமிட்டடை திரு. Harshul Kaushik, திரு. Harsh Sharma, திரு. Devkaran Sharma மற்றும் திரு. Hitesh Chhabra ஆகியோர் இணைந்து உருவாக்கியுள்ளனர். இந்த நிறுவனமும் அதன் நிறுவனர்களும் டிஜிட்டல் கருவிகளைப் பயன்படுத்தி மிகவும் திறமிக்க, சீரான முறையில் இந்திய வணிகங்களை இயங்கச் செய்ய வேண்டும் என்கிற நோக்கத்தைக் கொண்டுள்ளனர். வணிகத்தின் தன்மை, அளவு மற்றும் மதிப்பு என்னவாக இருந்தாலும் இந்த நிறுவனம் இந்திய நுகர்வோரைச் சென்றடையும் மற்றும் இது அவர்களுக்கு பலனளிப்பதற்கான மேடையை உருவாக்கித் தருகிறது. இந்த யோசனையை நிறைவேற்றுவதற்காக இந்த நிறுவனம் 6,000க்கும் அதிகமான வேலை வாய்ப்புக்களை உருவாக்கியுள்ளது, இந்தியா முழுவதிலும் 500+ சேனல் பார்ட்னர்களுடன் இணையவுள்ளது.
(Photo: http://mma.prnewswire.com/media/528170/RealCash_Technologies_Job_Opportunities.jpg )
(Logo: http://mma.prnewswire.com/media/509537/RealCash_Logo.jpg )
3.287 மில்லியன் சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டு பெரிதாகவும், 1.31 பில்லியன் மக்களைக் கொண்டு வலிமையாகவும் இருக்கும் இந்த நாட்டில் ஒவ்வொரு மூலைமுடுக்கிலும் டிஜிட்டல்மயமாக்குவது மிகப் பெரிய வேலை. ஜனவரி 2022ற்குள் இந்தியாவில் 10 மில்லியன் வணிகர்களைக் கொண்ட வணிக நெட்வொர்க்கை உருவாக்க வேண்டும் என்கிற திட்டத்தை நிறைவேற்ற சேனல் பார்ட்னர்களுடன்/விநியோகஸ்தர்களுடன் இணைவதற்கான வாய்ப்பு கிடைக்க வேண்டியது மிகவும் அவசியம். RealCash Technologies-ன் நோக்கத்தையும் இலக்கையும் நிறைவேற்ற உதவுவதற்காக, இந்த நிறுவனம் பல்வேறு மாநிலங்களிலும் துணை நகரங்களிலும் உள்ள வணிகர்களைச் சென்றடைய சேனல் பார்ட்னர்களை நியமிக்கிறது. வணிகர்களைச் சென்றடைவதற்கான நிகழ்முறையை எளிதாக்க, RealCash Technologies மாபெரும் வேலை வாய்ப்பு பிரசாரத்தைத் துவங்கியுள்ளது. இது நிறுவனத்தின் அதிவேக விரிவாக்கத் திட்டத்தை செயல்படுத்தும் வகையில் தொழில்நுட்பம்சார்ந்த மற்றும் தொழில்நுட்பம்சாராத பின்னணிகளைக் கொண்ட விண்ணப்பதாரர்களின் தொழில் வாய்ப்புக்களை விரிவுப்படுத்துவதை இலக்காகக் கொண்டுள்ளது. இது போன்ற அதிகம் பேரை வேலைக்கு சேர்க்கும்போதே, RealCash Technologies 500க்கும் மேற்பட்ட பார்ட்னர்களுடன் இணையவுள்ளது.
இந்த நிறுவனம் வருவாய் பகிர்தல் முறையின் அடிப்படையில் தனது சேனல் பார்ட்னர்கள் அனைவருடனும் செயல்படுகிறது. இது மிகப் பெரிய இ-காமர்ஸ் (மின்-வணிகம்) ஜாம்பவான்களால் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தை உள்ளூர் கடைக்காரர்/சில்லறை விற்பனையாளர்களுக்கு அளிப்பதன் மூலம், அவர்கள் இழந்த வணிகங்களை வலிமையுடன் மேற்கொள்ளச் செய்வதில் கவனம் செலுத்துகிறது. இதில் வேலைக்கு ஆட்களைச் சேர்க்க முதலில் RealCash நியமிக்கும் சேனல் பார்ட்னர்களும் மற்றும் தன்னிடம் சம்பளம் பெறும் வகையில் நிறுவனத்திற்கு தேவைப்படும் நபர்களும் கிட்டத்தட்ட நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தேர்ந்தெடுத்த பிறகு, சேனல் பார்ட்னர் மாவட்டத்தில் நியமிக்கப்பட்டதும், தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் அந்தந்த பகுதி மற்றும் துறைகளுக்கான இறுதி நேர்காணலுக்காக சேனல் பார்ட்னர்களிடம் அனுப்பப்படுவார்கள்.
இந்த நிறுவனம் தற்போது Area Sales Officer, Managers in Client On-Boarding, Accounts Executive, Inventory Executives மற்றும் மேலும் பல துறைகளில் PAN இந்தியா முழுவதிலும் வேலை வாய்ப்புக்களை அளிக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது. எந்த வேலைக்காக விண்ணப்பிக்கிறார்கள் மற்றும் பணியில் சேரும் பணியாளரின் பதவி ஆகியவை அனைத்தையும் பொறுத்து மாதாந்திர சம்பளம் ரூ.10,000 முதல் 1.5 லட்சம் வரை வழங்கப்படும். அனுபவமுள்ள விண்ணப்பதாரர்களும் புதிய பட்டதாரிகளும் தொழில்வாய்ப்புக்களைத் தேடி RealCash வலைதளமான https://www.realcash.in-ல் உள்ள வேலைவாய்ப்பு பக்கத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
RealCash, இந்தியா முழுவதிலும் வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதற்காகச் செயல்படும் அரசுசாரா அமைப்பான Helping Hands Charitable Trust உடன் இணைந்து இந்த பிரசாரத்தை மேற்கொள்ளும். HHCT PAN இந்தியா அளவில் RealCash-க்கான விண்ணப்பதாரர்களையும் RealCash சேனல் பார்ட்னர்களையும் தேர்ந்தெடுக்கும்.
RealCash பற்றி:
RealCash என்பது வணிகங்களுக்கான பேமன்ட் சொல்யூஷனை (பணம் செலுத்தும் வசதி) அளிக்கும் முன்னணி நிறுவனமாகும். இந்த நிறுவனம் எந்த முயற்சியை மேற்கொண்டாலும் சேவைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்கிற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
நாங்கள் எங்களின் வாடிக்கையாளர்களுக்கு தரம், மதிப்பு, மற்றும் லாபத்தை அளிக்கும் வகையில் வாடிக்கையாளர்களுடன் நெருங்கிய தொடர்பு, அதி நவீன தொழில்நுட்பம், துவக்கம் முதல் இறுதிவரையிலான முழுமையான சேவைமுறை ஆகியவற்றைக் கொண்டுள்ளோம். எங்கள் வாடிக்கையாளர்கள் வெற்றிப் பெற்றால், நாங்கள் வெற்றிப் பெறுவோம்.
RealCash Technologies Limited 2014ல் துவங்கப்பட்டது. நடைப்பாதை கடைக்காரர் துவங்கி பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் வரையில் அனைத்து நிறுவனங்களுக்கும் ஆதரவளிக்கும் திறன் எங்களுக்கு உள்ளது. நாங்கள் டிஜிட்டல் இந்தியா கனவை பெரிய அளவில் நிஜமாக்குவதற்காக வந்திருக்கிறோம். நாட்டின் ஒவ்வொரு மூலையையும் டிஜிட்டல்மயமாக்கினால் மட்டுமே இதனை அடைய முடியும்.
வலைதளம்: http://www.RealCash.in .
எங்களைப் பின்தொடருங்கள்:
Facebook: http://www.facebook.com/RealCash.in
LinkedIn: https://www.linkedin.com/company-beta/18071660/
Twitter: http://www.twitter.com/RealCashIn
YouTube: http://bit.ly/2q1kjQs
Google+: http://bit.ly/2pmB9ar
வணிகர்/வேலை விண்ணப்ப உதவி எண் - +91(0)11-40880000
சேனல் பார்ட்னர் ஆதரவு - [email protected]
பொதுவான தகவல்களுக்கு - [email protected]
ஊடகத் தொடர்பு:
Ramesh Kumar Sahu
Media Manager
RealCash Technologies Pvt. Ltd
[email protected]
+91-9773590657
Share this article