புபனேஸ்வர், இந்தியா, October 26, 2017 /PRNewswire/ --
ஒடிசா மக்களின் பெருமை மற்றும் மகிழ்ச்சிக்கு, Kalinga Institute of Social Sciences (KISS) லிருந்து சுமித்ரா நாயக் (17), 2017 சர்வதேச குழந்தைகள் அமைதிக்கான பரிசிற்கு மற்ற ஒன்பது நபர்களுடன்களுடன் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். 2017 ஆம் ஆண்டிற்காக பரிந்துரைக்கப்பட்டவர்கள், மாற்றத்தை உருவாக்குபவர்களின் தரத்தை வெளிப்படுத்துகின்றனர்.
(Photo: http://mma.prnewswire.com/media/590224/Sumitra_Nayak.jpg )
சுமித்ரா, KISS-ன் ஒரு ரக்பி வீரர் எந்த முரண்பாட்டிற்கும் எதிரான தனது பிடிவாதமான அணுகுமுறைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். அவரது வழியில் தோன்றிய விவரிக்க முடியாத தடைகளையும் மீறி, அவள் கைவிடவில்லை மாறாக மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக உருவானார். கடந்த ஆண்டு புனேயில் ஒரு டெட் பேச்சு வழங்குவதற்காக அவர் அழைக்கப்பட்டார், அங்கு அவர் ஒரு 'கனவு, சாதனை மற்றும் ஒரு ட்ரெண்ட் செட்டர்' எனப் பாராட்டப்பட்டார்.
அவர் ஒடிசாவின் ஜஜ்புர் மாவட்டத்தில் பிறந்தார் மற்றும் வறுமையில் வாடினார், ஒரு நாளுக்கு இரு முறை மட்டுமே உணவு உண்டு வாழும் நிலை. அவளுடைய அப்பா ஒரு குடிகாரர், தாமதமாக வீட்டுக்கு வருவது மற்றும் அடிக்கடி அவரது தாயாரை மனதளவிலும், உடலளவிலும், சித்திரவதை செய்வார். சுமித்ராவின் தாய்க்கு இனி தாங்கமுடியாதபோது, அவள் சுமித்ராவுடன் புவனேஸ்வருக்கு ஓடிவிட்டாள் அப்போது அவளுக்கு வயது நான்குதான்.
ஆரம்பத்தில் எந்தவொரு பொருத்தமான வேலையும் கண்டுபிடிக்க முடியாததால், சுமித்ராவின் தாயார், காயத்ரி, தனது குழந்தைகளை வளர்ப்பதற்காக நீண்ட நேரம் பணிப்பெண்ணாக வேலை செய்ய நிர்பந்திக்கப்பட்டார். வீடுகள் ஒன்றில் வேலை செய்யும் போது, காயத்ரி, பேராசிரியர் அச்சுத சமந்தா நிறுவிய KISS பற்றி தெரிந்துக் கொண்டார் மற்றும் 2008 இல் சுமித்ராவைச் சேர்த்தார்.
'ரக்பி' என்று அழைக்கப்பட்ட ஒரு 'விசித்திரமான விளையாட்டிற்கு' அவரது நண்பர்களின் வேண்டுகோளின் பேரில் உடனடியாக சுமித்ரா ஈர்க்கப்பட்டார். விரைவில் அவர் விளையாட்டில் கவரப்பட்டு மற்றும் 2009 இல் பயிற்சி பெறத் தொடங்கினார். 2012 இல், அவர் தனது முதல் மாநில அளவிலான போட்டியில் விளையாடியுள்ளார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் U-13 மகளிர் ரக்பி உலகக் கோப்பையில் பங்கேற்றார், தொடர்ந்து தேசிய சாம்பியன்ஷிப் மற்றும் தேசிய பள்ளி விளையாட்டுக்கள் ஆகியவற்றில் பங்கேற்றார். கடந்த ஆண்டு துபாயில் நடந்த ஆசியப் பெண்கள் ரக்பி செவன்ஸ் (U -18) போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார். சுமித்ரா, ஒரு முதல் ஆண்டு பட்டப்படிப்பு மாணவர், லண்டனில் உள்ள சர்வதேச ரக்பி போட்டியின் சுற்றுலா-உதவி மூலம் 13 வயதுக்கு கீழ் உள்ள பெண்களுக்கு பயிற்சி அளித்து அங்கு அவர் அணிக்கு வெற்றியைத் தந்தார்.
சர்வதேச சிறுவர் அமைதிக்கான பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டதைப் பற்றி உற்சாகத்தோடு கருத்துத் தெரிவித்த சுமித்ரா கூறியது, "அதைப் பற்றி கேள்விப்படும்போது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது, இருப்பினும், எனது வாழ்க்கையை மாற்றியமைத்த சமந்தா சாருக்கு எல்லாப் புகழும் சேரும்." இதற்கிடையில், பாராட்டத்தகுந்த விருதுக்கு சுமித்ராவின் பரிந்துரையைப் பற்றி திருப்தி அளிப்பதாக தெரிவித்த, KIIT & KISS இன் நிறுவனர், பேராசிரியர் அச்சுத சமந்தா தனது மாநிலத்தை, குறிப்பாக KISSஐ, தனது சிறந்த சாதனை மூலம் மிகவும் பெருமிதம் அடைந்ததற்காக பாராட்டியுள்ளார்.
டிசம்பர் 4, 2017 அன்று சர்வதேச குழந்தைகள் அமைதிக்கான பரிசு 2017, The Kids Rights Foundation னால் வழங்கப்படும். உண்மையில், இந்தப் பரிசு, குழந்தைகள் உரிமைகளுக்காக தைரியமாக போராடும் ஒரு குழந்தைக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. Kids Rights மூலம் இந்த பரிசு அறிமுகப்படுத்தப்பட்டது, இது குழந்தைகள் தங்கள் உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிக்கப்படும் ஒரு உலகத்தை உருவாக்குவதோடு, அவர்களது பெரும் திறனையும் அவர்கள் உணரும்படிச் செய்கிறது.
மேலும் தகவலுக்கு, பார்க்கவும்: https://kiss.ac.in/.
ஊடகத் தொடர்பு:
Shradhanjali Nayak
[email protected]
+91-9437020240
Director, PR, KIIT University
Share this article