வீட்டுக் கடன் இருப்புப் பரிமாற்றமாக ரூ. 50 லட்சம் டாப்-அப் சலுகையை Bajaj Finserv வழங்குகிறது
புனே, இந்தியா, May 29, 2018 /PRNewswire/ --
Bajaj Finance Ltd., Bajaj Finserv இன் கடன் வழங்கும் கையானது, தனது வாடிக்கையாளர்கள் மற்ற நிதி நிறுவனங்களில் இருந்து தங்கள் வீட்டுக் கடன்களை Bajaj Finserv ற்கு மாற்றும் போது, 50 லட்சம் வரை கூடுதலான டாப்-அப் தொகையை பெற வசதியளிக்கிறது. அவர்கள் Bajaj Finserv நிறுவனத்திற்கு மாற்றும் போது, நிறுவனமானது 8.40% வட்டி விகிதத்தில் வசதியளிக்கிறது, இது சந்தையில் மிகக் குறைவான ஒன்றாகும் இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் வீட்டுக் கடன்களில் ரூ. 50 லட்சத்திற்கும் மேலாக தங்கள் சேமிப்பை அதிகரிக்க முடியும்.
வீட்டு சீரமைப்பு, திருமண செலவுகள், விடுமுறை செலவுகள் அல்லது ஒரு புதிய சொத்து வாங்குவது உட்பட எந்த நோக்கத்திற்காகவும் தங்கள் விருப்பபடி டாப்-அப் தொகையை வாடிக்கையாளர்கள் பயன்படுத்த முடியும். வாடிக்கையாளர்கள் தங்கள் அவசர நிதி தேவைகளை பூர்த்தி செய்து அதே நேரத்தில் தங்கள் EMI சுமையைக் குறைக்க டாப்-அப் கடனுடன் இந்த வீட்டு கடன் இருப்புப் பரிமாற்றமானது தனித்தன்மை வாய்ந்த தெரிவாகும். இது வாடிக்கையாளர்கள் தங்கள் நிதிகளை திறமையாக நிர்வகிக்கவும் மற்றும் தங்கள் சேமிப்பை அதிகரிக்க வழிவகை செய்கிறது.
வாடிக்கையாளர்கள் வீட்டு கடன் இருப்பு பரிமாற்றத்திலிருந்து Bajaj Finserv விடம் எதிர்பார்க்கக்கூடிய சில முக்கிய நன்மைகள்:-
இருப்பு பரிமாற்றத்தின் மீது கூடுதல் டாப்-அப்
வீட்டு கடன் இருப்பு பரிமாற்றத்தை தெரிவு செய்யும் விண்ணப்பதாரர்களுக்கு கூடுதல் டாப்-அப் மதிப்பாக ரூ. 50 லடசம் குறைந்த வட்டி விகிதத்தில் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. டாப்-அப் தொகையானது பல நிதி தேவைகளைத் தீர்ப்பதோடு ஒரு வசதியான செயல்பாட்டின் மூலம் பெறப்படலாம்.
வீட்டு சேவை வசதி
அதன் வாடிக்கையாளர்களுக்கு முழு கடன் வழங்குதல் செயல்முறையை எளிதாக்க, Bajaj Finserv ஆனது வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப அவர்கள் கூறிய நேரத்தின்படி வாடிக்கையாளரின் ஆவணங்களை சேகரிப்பதற்காக வீட்டிற்கு வந்து சேவையை வழங்குகிறது. அடையாள அட்டை, முகவரி சான்று, வருமான விவரங்கள் மற்றும் வங்கி அறிக்கைகள் போன்ற குறைந்தபட்ச ஆவணங்கள் மூலம் வாடிக்கையாளர்கள் வீட்டு கடனுக்காக விண்ணப்பிக்க Bajaj Finserv அனுமதிக்கிறது.
வீட்டுக் கடன் மாதாந்திர இஎம்ஐ குறைத்தல்
பல்வேறு கடனளிப்பவர்களுடன் வேறுபட்ட வட்டி விகிதங்களில் வீட்டுக் கடன்கள் கிடைக்கின்றன. சில நேரங்களில் அதிகபட்ச வட்டி விகிதத்துடன் ஒரு வீட்டுக் கடனைப் பெற வேண்டியிருக்கிறது, மொத்த கால அளவை கருதும்போது குறிப்பிடத்தக்க அளவுக்கு பெரிய தொகையாக மாறுகிறது. தற்போதைய வீட்டுக் கடனை Bajaj Finserv விற்கு மாற்றுவதன் மூலம், வாடிக்கையாளர்கள் தங்கள் தற்போதைய வீட்டு கடன் வட்டி விகிதத்தில் நிறைய பணம் சேமிக்க முடியும்.
கிடைக்கப் பெறும் சிறந்த சேவைகள்
தற்போதய கடனளிப்பவர் கடுமையான விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் கொண்டுள்ளனர் மற்றும் திருப்பிச் செலுத்துவதில் எந்த நெகிழ்வுத்தன்மையையும் வழங்க வில்லை. எளிதான ஆன்லைன் கணக்கு மேலாண்மை, கணிசமாக குறைக்கப்பட்ட நிதிக் கட்டணத்துடன் செயலில் உள்ள வாடிக்கையாளர் சேவை ஆகியவற்றை அவர்கள் Bajaj Finserv க்கு தங்கள் வீட்டுக் கடனை மாற்றும்போது பெறுவர்.
நெகிழ்வான கட்டணத் தெரிவுகள்
Bajaj Finserv பஜாஜ் பின்செர்வ் 3-EMI விடுமுறை அல்லது 4-வருட முதன்மை விடுமுறை போன்ற நெகிழ்வான திருப்பிச் செலுத்தும் தெரிவுகளை வழங்குகிறது, இதனால் ஒருவர் நிதியை சிறந்த முறையில் திட்டமிட உதவுகிறது. Bajaj Finserv Hybrid Flexi loan தெரிவானது வாடிக்கையாளர் வட்டியை மட்டுமே ஈ எம் ஐ ஆக முதல் நான்கு ஆண்டுகளுக்கு செலுத்த அனுமதிக்கின்றது. 3-EMI விடுமுறை தெரிவானது வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக் கடனைப் பெற்ற முதல் மூன்று மாதங்களுக்கு பிறகு EMI இனை ஆரம்பிக்க அனுமதிக்கிறது.
சேமிப்புகளை அதிகரிக்க: - தற்போதைய உயர் வட்டி விகித வீட்டுக் கடனை, குறைந்த வட்டி விகிதம் 8.40% உள்ள Bajaj Finserv விற்கு மாற்றுவதன் மூலம், வாடிக்கையாளர்கள் நிதி நெருக்கடி காலத்தில் சேமிப்பை அதிகரிக்க உதவுகிறது. இதனால் ஒருவர் நிதியை சிறந்த முறையில் திட்டமிட உதவுகிறது.
Bajaj Finance Limited பற்றி:
Bajaj Finance Limited, பஜாஜ் ஃபின்ஸர்வ் குழுவின் கடன் மற்றும் முதலீட்டுப் பிரிவானது, இந்தியா முழுவதும் 21 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கும் சேவை அளிப்பதில் இந்திய சந்தையில் மிகவும் பரவலாக்கப்பட்ட NBFC களில் ஒன்றாகும். புனேயை தலைமையிடமாக உள்ள, நிறுவனத்தின் தயாரிப்பு வழங்கலில் நுகர்வோர் நீடிக்கும் கடன்கள், வாழ்க்கைமுறை நிதி, தனிப்பட்ட கடன்கள், சொத்துக்களுக்கு எதிரான கடன், சிறு வணிக கடன்கள், வீட்டுக் கடன்கள், கடன் அட்டைகள், இரு சக்கரங்கள் மற்றும் முச்சக்கர வண்டி கடன்கள், கட்டுமான உபகரணங்கள் கடன்கள், பத்திரங்களுக்கு எதிரான கடன் மற்றும் தங்கம் கடன்கள் மற்றும் வாகன மறுநிதியளித்தல் கடன்களை உள்ளடக்கிய கிராமப்புற நிதி. பஜாஜ் ஃபினான்ஸ் லிமிடெட் இன்று நாட்டில் எந்த NBFC க்கும் FAAA / நிலையின் மிக உயர்ந்த கடன் மதிப்பீட்டை வைத்திருப்பதில் பெருமை கொள்கிறது.
மேலும் அறிய, தயவுசெய்து செல்க:https://www.bajajfinserv.in
ஊடகத் தொடர்பு:
Ashish Trivedi
[email protected]
+91-9892500644
Bajaj Finance Ltd
Share this article