நியூட்டன் சினிமா தயாரிப்பான 'மயிலா' -- 55-வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் (ஐஎஃப்எஃப்ஆர்) தனது உலகத் திரையிடலை அறிவிக்கிறது.
ரோட்டர்டாம், நெதர்லாந்து, Jan. 28, 2026 /PRNewswire/ -- நியூட்டன் சினிமா (Newton Cinema), தனது தயாரிப்பான மயிலா திரைப்படம் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவின் (ஐஎஃப்எஃப்ஆர்) பிரைட் ஃபியூச்சர் பிரிவில் அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. உலகெங்கிலும் உள்ள புதிய குரல்களைக் கண்டறிவதில் இந்தத் திருவிழா செலுத்தும் கவனத்தை இந்தத் தேர்வு எடுத்துக்காட்டுகிறது.
செம்மலர் அன்னம் இயக்கத்தில் உருவான மயிலா, உழைக்கும் பெண்களின் வாழ்வியலையும் அனுபவங்களையும் ஆராய்வதுடன், அவர்களின் சவால்களையும் கண்ணோட்டங்களையும் தெளிவுபடச் சித்தரிக்கிறது.
இப்படத்தை வழங்கும் திரைப்படத் தயாரிப்பாளர் பா. ரஞ்சித் கூறுகையில், "'மயிலா' உழைக்கும் பெண்களின் எதார்த்தங்களையும், அவர்களின் அக உலகத்தையும் படம்பிடித்துக் காட்டுகிறது. நேர்மையான திரைமொழியுடன், ஒரு பெண்ணின் உலகத்தை இயல்பான நுணுக்கத்துடன் செம்மலர் அன்னம் சித்தரித்துள்ளார். நடிகர்கள் மெலடி மற்றும் சுடர் மிகச் சிறந்த நடிப்பை வழங்கியுள்ளனர். 'மயிலா' ஒரு கவிதையைப் போல என்னை ஆழமாக நெகிழ வைத்தது," என்றார்.
இந்தச் சித்தரிப்பைத் தொடர்ந்து, கதை சொல்லல் எவ்வாறு அன்றாட அனுபவங்களைப் பிரதிபலிக்கும் என்பதையும், இதுவரை அதிகம் பேசப்படாத கண்ணோட்டங்களை எவ்வாறு முன்னிலைப்படுத்தும் என்பதையும் மயிலா காட்டுகிறது. இதன் திரைக்கதை, தனித்துவமான குரல்கள் மற்றும் சமூக அக்கறையுள்ள சினிமாவின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. இது, உள்ளூர் சூழல்களுக்கு அப்பால் சென்று பார்வையாளர்களை ஈர்க்கும் திரைப்படத் தயாரிப்பாளர்களை ஆதரிக்கும் நியூட்டன் சினிமாவின் நோக்கத்துடன் ஒத்துப்போகிறது.
"செம்மலர் அன்னத்தின் கதை சொல்லல் மூலம் பெண்களின் அனுபவங்களையும் மன உறுதியையும் படம்பிடிக்கும், ஒரு ஆழமான உள்ளடக்கம் கொண்ட திரைப்படம் மயிலா. ததனித்துவமான குரல்கள் மற்றும் சமூக அக்கறையுள்ள சினிமாக்களை ஆதரிப்பதே நியூட்டன் சினிமாவின் முக்கிய நோக்கமாகும். ஐஎஃப்எஃப்ஆர்-ல் இப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது எங்களுக்கு ஊக்கமளிக்கிறது," என்று நியூட்டன் சினிமாவின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஆன்டோ சிட்டிலப்பள்ளி கூறினார்.
மெலடி மற்றும் சுடர் நடித்துள்ள இப்படத்திற்கு வினோத் ஜானகிராமன் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பும், ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி ஒலி வடிவமைப்பும் செய்துள்ளனர். இவர்கள் படத்தின் ஆழ்ந்த அனுபவத்திற்குப் பெரிதும் பங்களித்துள்ளனர்.
கலாச்சாரங்கள் மற்றும் சமூகங்களைக் கடந்து அனைவருக்கும் பொருந்தக்கூடிய கருப்பொருள்களை மயிலா பேசுகிறது. பெரும்பாலும் கவனிக்கப்படாத வாழ்க்கையைப் பற்றிய புரிதலை இது வழங்குகிறது. இப்படம் இயக்குநரின் பார்வையையும், தயாரிப்பு நிறுவனத்தின் கூட்டு அணுகுமுறையையும் பிரதிபலிக்கிறது. கதாபாத்திரங்களை மையமாகக் கொண்ட கதைகள் சர்வதேச பார்வையாளர்களிடமும் எதிரொலிக்கும் என்பதை இது காட்டுகிறது.
மயிலா மூலம், சமூக அக்கறையுள்ள படங்களை ஆதரிப்பதையும், தங்கள் படைப்புகளுக்கு பரந்த அங்கீகாரம் தேடும் திரைப்படத் தயாரிப்பாளர்களை வளர்ப்பதையும் நியூட்டன் சினிமா தொடர்ந்து செய்து வருகிறது.
நியூட்டன் சினிமா பற்றி : நியூட்டன் சினிமா என்பது அர்த்தமுள்ள கதை சொல்லலை ஆதரிக்கும் ஒரு சர்வதேச தயாரிப்பு நிறுவனமாகும். வளர்ந்து வரும் திரைப்படத் தயாரிப்பாளர்களில் கவனம் செலுத்தி, உள்ளூர் எதார்த்தங்களைப் பிரதிபலிக்கும் அதே வேளையில் உலகளாவிய அளவில் மக்களை இணைக்கும் படங்களை இது தயாரிக்கிறது.
கூடுதல் தகவலுக்கு, இணையதளம்: https://www.newtoncinema.com, @Newton_Cinema (Instagram), @Newtoncinema (Twitter) and Newton Cinema (Facebook)
வீடியோ - https://mma.prnewswire.com/media/2871820/Newton_Cinema.mp4
புகைப்படம் - https://mma.prnewswire.com/media/2871819/Newton_Cinema.jpg
Share this article