மும்பை, January 20, 2016 /PRNewswire/ --
மாடுலர் கிட்சன் நிபுநர் Sleek World, இந்தியாவில் மாடுலர் கிட்சனை முதல் முதலில் அறிமுகப்படுத்திய நிறுவனம், ரீடர்ஸ் டைஜெஸ்ட் நம்பிக்கைப்பெற்ற பிரண்ட் கருத்தாய்வு 2015, இந்தியாவில் "மாடுலர் கிட்சன் ஃபிட்டிங்ஸ்" பிரிவில் தங்கம் வென்றுள்ளது. இந்த ஆய்வு தனியார் மன்றமான, டிஎன்எஸ் மூலம் நடத்தப்பட்டது, இது தனது முடிவுகளை நாடு முழுவதிலும் இருந்து பெறப்பட்ட பல ஆயிரம் வாடிக்கையாலர் ஓட்டுக்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டுள்ளது. நேர்மையிலும் துல்லியத்திலும் Sleek பெற்றுள்ள அங்கீகாரம் தன்னிகரற்றது என்பதை இது மேலும் உறுதிப்படுத்துகின்றது.
(Photo: http://photos.prnewswire.com/prnh/20160120/10138438 )
கருத்தாய்வு குறித்து
ரீடர்ஸ் டைஜெஸ்ட் நம்பிக்கைப்பெற்ற பிராண்ட் விருதுகள் இம்முறை பதினேழாவது ஆண்டிற்குள் அடியெடுத்து வைக்கின்றன, இதில் ஓட்டுக்கள் ஆசியா முழுவதிலும் இருந்து பெறப்படுகின்றன, ஹாங்காங், சீனா, இந்தியா, பிலிப்பைன்ஸ், மலேசியா, தாய்லாந்து, தாய்வான் மற்றும் சிங்கப்பூர் ஆகிய இடங்கள் இதில் உள்ளடங்கும். இவ்விருது வாடிக்கையாளர் விருப்பத்திற்கான வாடிக்கையாலர் சார்ந்த முதன்மை அளவுகோலாக தனது அதிகாரத்தை நிலைநாட்டியுள்ளது. Sleek World உடைய அங்கீகரிப்பு ஜூன் 2015 ரீடர்ஸ் டைஜெஸ் பதிப்பில் வெளியிடப்பட்டது மற்றும் செப்டம்பர் 2015இல் ஒருங்கிணைக்கப்பெற்ற ஒரு நிகழ்விலே Sleek International Pvt. Ltd., பாராட்டப்பட்டது.
வருடாந்திர கருத்தாய்வானது இந்திய பதிலளிப்பாளர்களிடம் தங்கள் "அதிக நம்பிக்கைபெற்ற பிராண்ட்"ஐ தரம், மதிப்பு, சமூக பொறுப்பு, புதுமை, நம்பகத்தன்மை மற்றும் வாடிக்கையாளர் தேவைகளை பூர்த்திசெய்தல் ஆகியவற்றின் அடிப்படையில் பட்டியலிடும்படி கேட்டுக்கொள்கிறது. எந்த பிராண்ட் பெயரும் இந்த கேள்வித்தொகுப்பில் பரிந்துரைக்கப்படுவதில்லை மற்றும் "அதிக தகுதிவாய்ந்தது" என உணர்கின்ற பிராண்டை கண்டறிய மக்களுக்கு சுதந்திரம் உண்டு என்பதையும் கவனிக்கவும். இறுதி ஓட்டுக்களை ஒவ்வொரு பிரிவிலும் பெற்ற சராசரி மதிப்பெண்ணோடு பெருக்குவதன் மூலம் பிரிவுக்கான வெற்றியாளர்கள் பின்னர் தீர்மானிக்கப்படுகின்றனர்.
Sleek பெற்றுள்ள பல்வேறு விருதுகளில் ரீடர்'ஸ் டைஜெஸ்ட் ஒன்று. 2012, இந்த கிட்சன் பிராண்ட் இந்திய கிட்சன் காங்கிரஸினால் 'ஆண்டின் சிறந்த ரீடெய்லர்' விருதையும் ஹோம் காங்கிரஸினால் அதே ஆண்டு 'அதிகம் விரும்பப்பட்ட பிராண்ட் கிட்சன் ரீடெய்லர்' விருதையும் பெற்றது. 2013இல் ஏசியன் பெயிண்ட்ஸ், Sleek இன்டர்நேசனலுடைய 51% பங்குகளை வாங்கியபோது மக்கள் இந்த பிராண்ட் மீது வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்தி பெரிதாக சாதித்தது.
Sleek International Pvt. Ltd., குறித்து
Sleek International Pvt. Ltd., 1993ஆம் ஆண்டு முதல் இந்திய சந்தையில் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை பராமரித்து உள்ளது. இரும்பு கம்பி கூடைகளில் தொடங்கியது மாடுலர் கிட்சன் சந்தையில் முன்னணி பிராண்டாக மாற முற்பட்டுள்ளது. 2000 முதல் இந்நிறுவனம் புகைப்போக்கிகள், சமையல் அலமாரிகள், ஓவன்கள், ஹாப்கள், மற்றும் பிற வன்பொருட்களை இறக்குமதிசெய்ய தொடங்கியது. இந்தியாவில் மாடுலர் கிட்சன் டிரென்டிற்கு அதுவே தொடக்க தளமாகவும் அமைந்தது.
2008இல், சீஜ், கிராஸ், டெரிம் மற்றும் டெக்னோய்க்ஸ் உள்ளிட்ட சில மிக சக்திவாய்ந்த சர்வதேச பிராண்ட்களுடன் இணைந்து இந்திய சந்தைக்கு சிறந்த சமகால சமையலறை வடிவமைப்புகளை கொண்டு வந்தது. இந்நிறுவனம் அதன் பின்னர் 2009 ஆம் ஆண்டிலே அதிகம் விரும்பிய ஐஎஸ்ஓ 9001-2008 சான்றைப் பெற்றது. தனது வடிவமைப்புகளுக்காகவும் அற்புதமான மதிப்பைத் தரும்படி போட்டியாளர்களுக்கு இணையாக விலைவைக்கப்பட்ட தனது மாடுலர் கிட்சனுக்காகவும் விமர்சகர்களிடம் இருந்தும் வாடிக்கையாளர்களிடம் இருந்தும் SLEEK சில மூர்க்கமான விமர்சன்ங்களையும் பெற்றுள்ளது.
2014இல், ச்லீக், துபாயில் தனது பிரத்தியேக காட்சியகத்தின் மூல சர்வதேச சந்தைக்குச் சென்றது. இலங்கை மற்றும் டான்சானியாவில் அதிக இடங்கள் வரவிருக்கின்றன.
SLEEK கின் பயணம் அதிகமான வாஞ்சையையும், விடாமுயற்சியையும், புதுமையையும் வலியுறுத்துகின்றது. 'மாடுலர் கிட்சன் ஃபிட்டிங்ஸ்' பிரிவிலே 'அதிக நம்பிக்கைப்பெற்ற பிராண்ட்' ரீடர்'ஸ் டைஜெஸ்ட் விருதுகள் நிச்சயமாக இந்த பிராண்ட் தனது பங்களிப்பை தொடர்வதற்கு ஊக்கமளிக்கும் ஒரு அங்கீகாரமாகும்.
ஊடக தொடர்பு:
விரால் தேசாய்
[email protected]
+91-22-64527616
பொது மேலாளர் - ரீடெய்ல் ப்ராஜெக்ட்ஸ் & இபிஸ்னஸ்
Sleek International Pvt. Ltd.
Share this article