சென்னை, July 19, 2016 /PRNewswire/ --
G.M. Pens International, Sachin Tendulkarஐ விளம்பரத் தூதுவராகக் கொண்டு Roritoவை வெளியிடுகிறது
சென்னையைத் தலைமையகமாகக் கொண்டுள்ள G.M. Pens International Pvt Ltd, 1995 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது, அதுமுதல் எழுதும் கருவிகளின் பிரிவிலே முன்னணி நிறுவனமாக வளர்ச்சியடைந்து உள்ளது. உலகெங்கிலும் இருந்து சிறந்ததை கொண்டு வந்து வழங்க வேண்டும் என்கிற கண்ணோட்டத்தில், உலகளாவிய நிபுநர்களிடம் இருந்து தொழில்நுட்ப மேன்மையை தன்னோடு சேர்த்துக்கொண்டுள்ளது; இந்நிறுவனம் தனது புதிய பிராண்ட் Rorito வெளியிடப்படுவதை அறிவித்துள்ளது, இதை நிறைவுசெய்யும்படியாக 'Write The New' என்கிற கோஷமும் உள்ளது! Rorito என்பது ஒரு உலகளாவிய பிராண்ட், இதற்கு தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டுக்காக தொழில்நுட்ப பங்காளராக Schneider (Germany) போன்ற உலகளாவிய பங்காளர்கள் உண்டு. Dokumental (Germany) மற்றும் Mikuni (Japan) ஆகியோர் மை தொழில்நுட்பத்திற்கு பங்காளர்களாக இருக்கிறார்கள். இந்த மதிப்புமிக்க கூட்டுறவுகளின் முக்கிய பயனானது எழுதும் கருவிகளில் நவீன சர்வதேச போக்குகளை அணுகுதலும் இந்திய விலையில் உலகத்தரம் வாய்ந்த தயாரிப்புகளை அளிப்பதும் தான்.
(Photo: http://photos.prnewswire.com/prnh/20160718/10150710)
Rorito விரிவாக்கக்கூடிய தயாரிப்பு ரகத்துடன் சந்தைக்குள் நுழைகின்றது, இதில் பால் பேனாக்கள், ரீட்ராக்டபிள் ரேஞ்ச், சிடி மற்றும் டிவிடி மார்க்கர்கள், ஹைலைட்டர்கள், திருத்தம்செய்யும் பேனாக்கள், வெள்ளை பலகை மார்க்கர்கள், ஃபவுண்டெயின் பேனாக்கள், Kwik Stik (பசை தண்டு) மற்றும் Quicky (லீட் பென்சில்கள்) ஆகிய பிரிவுகளும் உள்ளடங்கும். Sachin Tendulkar இந்த புதிய பிராண்ட் Roritoவுக்கு விளம்பர தூதுவராக இருப்பார். மே மாதம் வெளியிடப்பட்ட தொலைக்காட்சி விளம்பரமானது நாடு முழுவதும் முக்கிய அலைவரிசைகளில் பார்க்கப்படும்.
G.M. Pens International ஒரு பேனாவின் நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையை நயமாக கைப்பற்றி உள்ளது, இந்த புதிய தயாரிப்பானது ஒரு உலகளாவிய, விவேகமான மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தைப் பிரதிபலித்து, நவீன தலைமுறைக்கு சேவை செய்கிறது. இருபது ஆண்டுகளுக்கும் மேலாக முக்கியத்துவம்வாய்ந்த துறை இருப்புடன், நாட்டிலே எழுதும் கருவிகள் பார்க்கப்பட்ட விதத்தை மாற்றியமைத்துள்ளது. G.M. Pens International சென்னையிலும் புதுச்சேரியிலும் பரந்த வசதிகளுடனான பெரிய உற்பத்தி மையங்களை கட்டியெழுப்ப கணிசமான தொகையை முதலீடுசெய்துள்ளது. சென்னையிலுள்ள அதிநவீன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கட்டிடமானது, உலகெங்கிலும் உள்ள எழுதும் கருவித் தொழிற்சாலையிலே மிகவும் அதிநவீனமானது, மற்றும் இந்திய வாடிக்கையாளர்களுக்கு எழுதும் தொழில்நுட்பத்தில் சமீபத்தியது கிடைக்கச் செய்வதை இது உறுதிசெய்கின்றது. G.M. Pens International மார்க்கர்கள் மற்றும் வண்ணம்தீட்டும் ரகங்களுக்கும் மட்டும் இல்லாமல், ஒரு நாளைக்கு 2.5 மில்லியனுக்கும் அதிகமான பேனாக்களை உற்பத்திசெய்து விற்பனைசெய்கிறது. ஒரு நல்ல எழுதும் பேனா மேம்பட்ட தொழில் நுட்பத்தின் துல்லியமான பொறியியலை பேனா முனைகளிலும், அறிவியல் ரீதியாக உருவாக்கம் செய்யப்பட மைகள் மற்றும் பணிச்சூழலியலை சீர்படுத்துகின்ற ஒரு வெளிப்புற கட்டமைப்பு ஆகியவற்றுடன் பிரம்மிப்பூட்டும், அதே சமயம் செயல்படுகின்ற வடிவமைப்புகளை ஒன்றுசேர்க்கிறது.
இத்தருணத்திலே பேசிய, Mr. Indrakumar Mahendran, துணை மேலாண்மை இயக்குநர், G.M. Pens International Pvt Ltd இவ்வாறு கூறினார், "இருபது ஆண்டு கால இடைவெளியிலே இந்நிறுவனம் வலிமை மேல் வலிமை பெற்று வளர்ச்சியடைந்து இந்தியாவில் எழுதும் கருவிகள் பார்க்கப்பட்ட விதத்தை மாற்றியமைத்துள்ளது. G.M. Pens International Pvt Ltdவில் இருந்து புதிய உலகளாவிய பிராண்ட் Roritoவை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்! உயர்ந்த தரம்வாய்ந்த, மலிவான தயாரிப்பை வழங்க வேண்டும் என்பது G.M. Pens International உடைய தரிசனம். இந்த நோக்கத்தை நிறைவேற்றியது தான் இந்திய நுகர்வோர்களிடையே எங்களைப் பிரபலமடையச் செய்துள்ளது. சிறப்பானதை மட்டுமே அளிக்க வேண்டும் என்பது எங்கள் வாஞ்சை, இது நாங்கள் புதுமையாக இருக்கவும், உயர்வான தயாரிப்புகளை உருவாக்கவும், அதன் மூலம் லட்சக்கணக்கானோரின் இதயங்களை வெல்லவும் உதவியது. Rorito என்பது எங்களுடைய அனைத்து தனித்துவமான வழங்கல்களின் விளைவாக இருக்கிறது மற்றும் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் நாங்கள் தொடர்ந்து புதுமைகளை புகுத்துவோம்."
புதிய பிராண்டின் நிறங்கள் சிவப்பு மற்றும் வெள்ளை. சிவப்பு நிறமானது Roritoவின் நெருப்புபோன்ற உணர்வையும் ஆற்றலையும் குறிப்பிடுகின்றது; அதேசமயம் வெள்ளை நிறமானது புதுமையையும் சாத்தியத்தையும் குறிப்பிடுகின்றது. இந்த புதிய அவதாரத்திலே, புதிய கண்ணோட்டங்கள், உயர்வான இலக்குகள் மற்றும் இளமைமிகுந்த சுறுசுறுப்பு ஆகியவற்றை Rorito வெளிப்படுத்துகின்றது. இந்த தயாரிப்பு இதன் இளம் பயனாளர்களின் ஆசைகளைப் புரிந்துகொண்டு, அவர்களுடைய சிந்தனைகளுக்கும், யோசனைகளுக்கும், கற்பனைகளுக்கும் சிறகுகளை அளிக்கின்றது. Rorito சுதந்திர உணர்வுடையது மற்றும் கேளிக்கைமிகுந்தது; இது இயக்கத்தன்மையை வெளிப்படுத்தி இதன் பயனாளிகளுக்கும் அதே ஆற்றலை அளிக்கிறது.
G.M. Pens International-இல் உள்ள பெரும்பாலான புதுமைகளும் தயாரிப்பு மேம்பாடுகளும் நுகர்வோர் கருத்துக்களில் இருந்து வருகின்றன, மற்றும் நுகர்வோரின் தேவையிலுள்ள இடைவெளிகளே ஆராய்ச்சி & மேம்பாட்டு வளர்ச்சிகளின் தொடக்கப் புள்ளியாக இருக்கின்றன. பல்வேறு மொழிகளையும், பல்வேறு எழுத்து அமைப்புகளையும், எழுதும் பழக்கத்தையும் கொண்டுள்ள இந்தியா போன்ற மிகவும் வேற்றுமைநிறைந்த நாட்டிற்கு 20 ஆண்டுக்கும் மேலாக தயாரிப்புகளை உருவாக்கி, ஒரு மிகப்பெரிய எழுதுகின்ற பயனர்கள் தளத்திற்கு சேவைசெய்தது, GM Pens International நிறுவனத்திற்கு உலகின் வேறு எந்த நாட்டைக் காட்டிலும் மிகப்பெரிய அறிவுசார் தளத்தை அளித்துள்ளது.
G.M. Pens International Pvt Ltd பற்றி:
G.M. Pens International உலகெங்கிலும் இருந்து புகழ்பெற்ற பிராண்டுகளான ஜெர்மனியின் Schneider and Dokumental மற்றும் ஜப்பானின் Mikuni போன்றவற்றைக் கொண்டுவந்து கூட்டணிகளையும் பங்காளத்துவத்தையும் ஏற்படுத்தி, கடந்த 20 ஆண்டுகளாக இந்திய எழுதும் துறையின் முன்னோடியாக திகழ்ந்து வருகின்றது. திரவ (Fluid) மை மற்றும் திரவ (Liquid) மை போன்ற அதிநவீன தொழில்நுட்ப புதுமைகளுக்கான மைல்கள்களை இந்நிறுவனம் அமைத்துள்ளது, இந்நாள்வரை இவற்றுக்கான தேவை உள்ளது. ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மீதான மகத்தான கவனத்துடன் ஊக்கப்படுத்தப்பட்ட அடையாளத்துடன், புதுமையான தீர்வுகளை நாடுகிறது; G.M. Pens International இன்று இந்தியாவின் நேர்த்தியான மற்றும் முன்னணி உற்பத்தி நிறுவனமாக கருதப்படுகின்றது.
மேலும் தகவல்களுக்கு வருகைதாருங்கள்: http://www.roritoworld.com/
ஊடக தொடர்பு:
Gayatri Shanker
[email protected]
+91-95000 42923
Perfect Relations
Share this article